சென்னை, மே 25, 2021 : பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் பால் மற்றும் பால் பொருட்களை விநியோகம் செய்வதற்காக
பால்பண்ணைகள் மற்றும் பால் நிறுவன ஊழியர்கள், முகவர்களுக்கு இரு சக்கர இ-பாஸ் வழங்க வேண்டும், என்று திருமலை, ஜெர்சி,
ஹெரிடேஜ், டோட்லா உள்ளிட்ட முன்னணி பால் நிறுவனங்கள், பால் முகவர்கள் சங்கத்துடன் இணைந்து தமிழக அரசுக்கு கோரிக்கை
விடுத்துள்ளது.
வாடிக்கையாளர்களுக்கு பால் விநியோகம் தடை படாமல் நடக்க இருசக்கர வாகன சேவை அவசியமானதாகும். மேலும், இருசக்கர
வாகனங்கள் சமூக தூரத்துடன் பயணிப்பதோடு, பாதுகாப்பான வழியில் பால் விநியோகம் செய்யவும் வழிவகுக்கிறது. பால் நிறுவனங்கள்
வாடிக்கையாளர்களை அடைய முடியாவிட்டால், அவர்களால் விவசாயிகளிடம் இருந்து பால் சேகரிக்க முடியாது. இதனால், அன்றாட
வாழ்வாதரம் மற்றும் வருமானத்திற்கு பால் ஆதாரத்தை நம்பியுள்ள வழக்கமான பால் விவசாயிகளுக்கு இது மோசமான தாக்கத்தை
ஏற்படுத்தும்.
தினசரி அடிப்படையில் பால் என்பது குழந்தைகளுக்கு சந்தேகத்திற்கு இடமின்றி அவசியம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதன் மூலம் அவர்களின் வளர்ச்சியை உறுதி செய்கிறது. கால்சியம், வைட்டமின் டி, புரோட்டீன்
மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் பால் ஒரு சிறந்த மூலமாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது. குறிப்பாக ஊரடங்கு
அமலில் உள்ள இந்த நேரத்தில் இது மிகவும் இன்றியமையாதது மற்றும் அனைத்து குடும்பங்களுக்கும் காலத்தின் தேவை.
பால் பயன்பாட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்தும், பால் வியாபரத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதரத்தை கருத்தில்
கொண்டும், வாடிக்கையாளர்களுக்கு பால் வழங்குவதற்காக சில்லறை கடைகளை அதிகாலை 2 மணி நேரம் திறக்க வேண்டும், என்றும்
அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம்.
அனைத்து தனியார் பால்பண்ணைகளும் வாடிக்கையாளர்களுக்கு பண்ணைகள் முதல் வீடுகள் வரை கடுமையான பாதுகாப்பு
நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுகின்றன என்று உறுதியளிக்கிறோம்.




















4 thoughts on “பால் நிறுவன ஊழியர்கள் மற்றும் முகவர்களுக்கு இரு சக்கர வாகன இ-பாஸ் வழங்க வேண்டும் : பால்பண்ணை மற்றும் பால் முகவர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை”
Comments are closed.