பக்கிங்காம் கால்வாய்க்கு குறுக்கே கட்டப்படவுள்ள பாலத்துக்கான இடத்தை அமைச்சர் ஆய்வு

துரைப்பாக்கம் முதல் நீலாங்கரை வரை இணைப்பதற்காக அமைக்கப்பட்டு வரும் சாலைப்பணியையும் – அந்த சாலையில், பக்கிங்காம் கால்வாய்க்கு குறுக்கே கட்டப்படவுள்ள பாலத்துக்கான இடத்தையும் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அடையாறு – கூவம் ஆறுகளை இணைக்கும் பக்கிங்ஹாம் கால்வாய் இவரின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் சுமார் 3.5 கிலோ மீட்டர் பயணிக்கிறது. அதன் கரைகளின் இருபுறங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் கால்வாய் மாசடைந்து கழிவுகளாக ஓடுகிறது. இந்தக் கால்வாயைத் தூர்வாரி சுத்தப்படுத்தி கரைகளை அழகுபடுத்தித் தொடர்ந்து.அவற்றைச் சுகாதாரமாகப் பராமரிக்கும் பணியில் சென்னை மாநகராட்சி-குடிநீர் வடிகால் வாரியம்-நீர்வளத்துறை-மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என பல்வேறு துறைகளை ஒருங்கிணைக்கும் பணியையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறம்பட மேற்கொண்டு வருகிறார்.அதன்பணிகளை மேற்பார்வையிட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை ராஜீவ் காந்தி சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலையை, துரைப்பாக்கம் முதல் நீலாங்கரை வரை இணைப்பதற்காக அமைக்கப்பட்டு வரும் சாலைப்பணியையும் – அந்த சாலையில், பக்கிங்காம் கால்வாய்க்கு குறுக்கே கட்டப்படவுள்ள பாலத்துக்கான இடத்தையும் இன்று ஆய்வு செய்தோம். முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை மற்றும் பாலத்துக்கான கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் -அலுவலர்களை அறிவுறுத்தினோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Author: ADmiNIstRAtoR