மருத்துவமனை குறித்து சமூக வலைதளங்களில் பொய்யான தகவலை பதிவு செய்ததாக கூறி, ஐந்து கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு நடிகை ரைசா வில்சன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக Skin Health Foundation மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நடிகை ரைசா வில்சனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் Skin Health Foundation மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி செந்தில், மருத்துவர் பைரவி செந்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறியது:
நடிகை ரைசா வில்சன் எங்கள் மருத்துவமனையில் முதல் முறையாக சிகிச்சை பெற்றதாகவும், அதனால் மட்டுமே இப்படி பாதிப்பு எற்பட்டிருப்பதாகவும் பொய்யான தகவலை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார். மேலும் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டும் என்றும் அவர் கூறி இருந்தார்.
ஆனால் அவர், கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து தற்போது வரை மூன்று முறை சிகிச்சை பெற்றுள்ளார்.
மேலும் அவர் பெற்றுவரும் சிகிச்சையில் திடீரென இப்படி ஏற்படலாம் என்றும், அந்த பாதிப்பு அதிகபட்சமாக 8 நாட்களில் சரி ஆகிவிடும் என்று தெரிந்தும் இப்படி மருத்துவமனை மீது உள்நோக்கத்தோடு பொய்யான தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும் அவரை கட்டாயப்படுத்தி எந்தவொரு சிகிச்சையும் தரப்படவில்லை. சிகிச்சை குறித்து முழுமையாக விளக்கமளித்து அவரிடம் கையொப்பம் பெற்ற பின்னரே சிகிச்சை நடைபெற்றது.
எனவே, மருத்துமனையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டதற்காக 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு, நடிகை ரைசா வில்சனுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நடிகை ரைசா வில்சன், Skin Health foundation மருத்துவமனையில் முகவாய் தாடை சீரமைப்பு சிகிச்சை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





















6 thoughts on “நடிகை ரைசா மீது 5 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு வழக்கு”
Comments are closed.