சென்னை ஜூன் 8, 2021: இந்திய குடியரசு கட்சி தலைவர் சே.கு.தமிழரசன் மற்றும் அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கொரோனா பணி தொடர்பாக ,தலித் மருத்துவ மேலதிகாரிகள் சொல்வதை, தலித் அல்லாத கீழ் மட்ட மருத்துவ அதிகாரிகள் ஏற்காத போக்கும், அவர்களை சாதியை குறிப்பிட்டு இழிவாக திட்டும் போக்கும் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.
இத்தகைய சூழ்நிலையில், கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனையில் ஒரு தலித் மருத்துவ அதிகாரியை, ஓர் இளம் வயது மருத்துவர் இழிவாக திட்டியதோடு, சட்டையை பிடித்து அடித்தும் தாக்கியுள்ளதாக தெரிகிறது. அவர் தமிழக மின்சார துறை அமைச்சருக்கு நெருங்கிய உறவினர் எனக் கூறப்படுகிறது.
கொரோனா பணி தொடர்பாக ஒரு தலித் மருத்துவ அதிகாரிக்கும், மற்றோரு இளம் மருத்துவருக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையில், துறைவாரியாக பேசி உரிய தீர்வை காணாமல், தலித் மருத்துவ அதிகாரியை மட்டும் கைது செய்து விழுப்புரம் சிறையில் அடைத்திருப்பது கண்டனத்திற்குரியது. அவரது கைதில் அமைச்சர் தலையீடு இருப்பதாக கூறப்படுகிறது. தலித் மருத்துவர்கள், மருத்துவ அதிகாரிகள் அச்சத்தோடு, பாதுகாப்பற்ற சூழலில் பணி புரிய வேண்டிய சூழலை உருவாக்கி இருக்கிறது.
இது குறித்து தமிழக முதல்வர் உடனடியாக இதில் தலையிட்டு கைது செய்யப்பட்ட தலித் மருத்துவரை விழுப்புரம் சிறையிலிருந்து விடுதலை செய்யவும், மேலதிகாரியை ஜாதியை சொல்லி அடித்து இழிவுபடுத்திய மருத்துவரை உடனடியாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்துகிறோம்.






















10 thoughts on “தலித் மருத்துவ அதிகாரி கைதிற்கு தலித் அமைப்புகள் கண்டனம் உடனடியாக விடுவிக்க முதல்வருக்கு கோரிக்கை”
Comments are closed.