சென்னை, 15 ஜூலை 2020: சென்னை பெருநகர ஒலி,ஒளி அமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் ஊரடங்கு காரணமாக வேலையின்றி தவித்து வரும் ஒலி, ஒளி அமைப்பாளர்கள், வாடகை பாத்திர நிலையம், வாடகைக்கு டெக்ரேஷன் செய்யும் தொழிலாளர் குடும்பங்களுக்கு அரிசி பைகள் வழங்கப்பட்டது.
சென்னை பெருநகர ஒலி, ஒளி அமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர் நலச்சங்கத்தின் தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாம்பலம் காவல்துறை உதவி ஆணையர் கலியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று தொழிலாளர்களுக்கு அரிசி பைகளை வழங்கினார்.




பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் சந்திரசேகர், “ஊரடங்கு தடை உத்தரவால் தமிழகம் முழுவதும் ஒலி,ஒளி அமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மார்ச் முதல் ஜூன் வரை கோயில் திருவிழாக்கள்,விசேஷ நிகழ்ச்சிகள் நடக்கும். இது போன்ற நேரத்தில் தடை உத்தரவால் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். ஒலி, ஒளி அமைப்பாளர்கள் குறித்து மாவட்டம் வாரியாக கணக்கெடுப்பு நடத்தி அரசு எங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை பெருநகர ஒலி, ஒளி அமைப்பாளர்கள் மற்றும் தொழிலாளர் நலச்சங்கத்தின் செயலாளர் குணசேகரன், பொருளாளர் முகமது சித்திக், துணைத்தலைவர் சுப்பிரமணியன், நிர்வாகி சக்திவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.





















9 thoughts on “சென்னை பெருநகர ஒலி, ஒளி அமைப்பாளர்களுக்கு நிவாரண உதவி”
Comments are closed.