எஸ்ஆர்எம் இன்ஸ்ட்டிடுயுட் ஆப் ஓட்டல் மேனேச்மென்ட் சார்பில் உலக சுற்றுலா தினம் செப்டம்பர் 27 அன்று கொண்டாடுவதை முன்னிட்டு ஆண்டு தோறும் எஸ்ஆர்எம் பல்கலைகழக வளாகத்தில் கொண்டாடப்பட்டு வருகின்றன.
1980 ஆம் ஆண்டு முதல், ஐக்கிய நாடுகளின் உலக சுற்றுலா அமைப்பு செப்டம்பர் 27 அன்று உலக சுற்றுலா தினத்தை சர்வதேச தினமாக கொண்டாடுகிறது. இந்த தேதியானது 1970 இல் தேர்ந்தெடுக்கப்பட்டது, UNWTO இன் சட்டங்கள் மூலமாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. இந்தச் சட்டங்களை ஏற்றுக்கொண்டது உலக சுற்றுலாவில், ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இந்த நாளின் நோக்கம் சர்வதேச சமூகத்திற்குள் சுற்றுலாவின் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் , உலகளவில் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதார விழுமியங்களை அது எவ்வாறு பாதிக்கிறது என்பதை நிரூபிப்பதும் ஆகும்.
அக்டோபர் 1997 இல் துருக்கியின் இஸ்தான்புல்லில் அதன் பன்னிரண்டாவது அமர்வில் , UNWTO பொதுச் சபை உலக சுற்றுலா தின கொண்டாட்டத்தில் அமைப்பின் பங்களிப்பாக செயல்பட ஒவ்வொரு ஆண்டும் ஒரு புரவலன் நாட்டை நியமிக்க முடிவு செய்தது. அக்டோபர் 2003 இல் சீனாவின் பெய்ஜிங்கில் நடந்த பதினைந்தாவது அமர்வில், உலக சுற்றுலா தின கொண்டாட்டங்களுக்கு பின்வரும் புவியியல் வரிசையை சட்டமன்றம் முடிவு செய்தது. 2006 ஐரோப்பாவில்; தெற்காசியாவில் 2007, 2008 அமெரிக்காவில், ஆப்பிரிக்காவில் 2009 மற்றும் மத்திய கிழக்கில் 2011.
நைஜீரிய நாட்டைச் சேர்ந்த மறைந்த இக்னேஷியஸ் அமடுவா அடிக்பி, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 27ஆம் தேதியை உலக சுற்றுலா தினமாகக் கொண்டாடும் யோசனையை முன்வைத்தவர். அவர் இறுதியாக 2009 இல் அவரது பங்களிப்புக்காக அங்கீகரிக்கப்பட்டார். உலக சுற்றுலா தினத்தின் நிறம் நீலம்.
உலக சுற்றுலா நாள் (World Tourism Day) உலக சுற்றுலா நிறுவனத்தின் ஆதரவில் செப்டம்பர் 27ம் நாளில் 1980ம் ஆண்டிலிருந்து உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.1979இல் ஸ்பெயினில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் உலக சுற்றுலா நிறுவனத்தின் மூன்றாவது பொது அவைக்கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. சுற்றுலாவின் முக்கியத்துவத்தை உலகெங்கும் எடுத்துக்காட்டவும் சுற்றுலா எப்படி மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டவும் இந்நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
அதேபோன்று ஒவ்வொரு ஆண்டும் எஸ்ஆர்எம் நிறுவனத்தின் வேந்தரும் – நாடாளுமன்ற உறுப்பினரான பாரிவேந்தர் பச்சமுத்துவின் ஆணையின் பேரில் எஸ்ஆர்எம் பல்கலைகழகத்தின் துணை வேந்தர் ரவி பச்சமுத்து மற்றும் சத்தியநாராயணன ஆகியோரின் ஆலோசனையின்பேரில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டன. நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தமிழக சுற்றுளா துறையின் செயலர் சந்தீப்நந்தூரி, எஸ்ஆர்எம் அறிவியல் & தொழில்நுட்ப கல்லூரியின் ரிஷி ஸ்டார் எஸ்.பொண்னுசாமி, விமான் அவியேஷன் அகாடமியின் தலைவர் மன்பிரிட் கவுர் ஆகியோர் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியினை துவக்கி சிறப்புரை வழங்கி சிறப்பித்தனர்.
மேலும் நிகழ்ச்சியினை சிறப்பிக்கும் வகையில் எஸ்ஆர்எம் இன்ஸ்டிடுயுட் ஆப் ஓட்டல் மேனேஷ்மென்ட் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியதோடு கலை நிகழ்ச்சியும் நடைபெற்றன. உலக சுற்றுலா தினம் பற்றிய புத்தக வெளியீடும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் நடைபெற்றன. சிறப்பு விருந்தினர்கள் மூலமாக பல்வேறு பயனுள்ள கருத்துகள் மாணவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டன. எஸ்ஆர்எம் ஓட்டல் மேனேஸ்மென்ட் கல்லூரியின் இயக்குனர் டி. அந்தோனி அசோக் குமார் துறை சார்ந்த பங்களிப்பு பற்றிய விளக்கத்தை வழங்கினார்




















12 thoughts on “எஸ்ஆர்எம் இன்ஸ்ட்டிடுயுட் ஆப் ஓட்டல் மேனேச்மென்ட் சார்பில் உலக சுற்றுலா தினம் செப்டம்பர் 27 அன்று கொண்டாடுவதை முன்னிட்டு ஆண்டு தோறும் எஸ்ஆர்எம் பல்கலைகழக வளாகத்தில் கொண்டாடப்பட்டு வருகின்றன”
Comments are closed.