கடந்த 44 வருடமாக தலித் இயக்கத்திலேயே முதன்மை பெற்ற இயக்கமாக நாங்கள் இருக்கின்றோம்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அம்பேத்கர் மக்கள் கட்சி இயக்கமும் தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.
கடந்த நான்காண்டு காலமாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் எங்களுடைய உயர்மட்ட செயற் குழு ஒன்று கூடி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு தருவதாக தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளோம்.
இது தொடர்பாக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து தங்களுடைய ஆதரவை தெரிவித்தோம்.
அதற்கு அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். குறிப்பாக 20 மாவட்டங்களில் நாங்கள் வலுவாக இருக்கின்றோம்.
இந்த 20 பகுதியில் எல்லாம் குறைந்தது பத்தாயிரம் ஓட்டு தரக்கூடிய சூழலில் வலுவாகவே இருக்கின்றோம். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 4 தொகுதிகள் கேட்டுள்ளோம் அதற்கு முதலமைச்சர், மற்றும் துணை முதலமைச்சரும் கூட்டணி கட்சியுடன் பேசிவிட்டு நிச்சயம் நல்ல பதில் தருவதாக தெரிவித்து இருக்கிறார்கள்.
இளமுருகமுத்து, செயல்தலைவர் – அம்பேத்கர் மக்கள் இயக்கம்





















13 thoughts on “அம்பேத்கர் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு”
Comments are closed.