அண்ணா பல்கலைக்கழகத்தின் நான்காவது மண்டலத்தின் மாணவிகளுக்கான பூப்பந்து போட்டி குரோம்பேட்டை மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதல் அரையிறுதி போட்டியில் SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரி அணி 3-0 புள்ளி கணக்கில் ஶ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி அணியை வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இரண்டாவது அரையிறுதி போட்டியில் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி அணி 3-0 புள்ளி கணக்கில் ஸ்ரீ சாய்ராம் தொழில்நுட்பக் கல்லூரியை வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
பின்னர் நடைபெற்ற மூன்றாம் இடத்திற்கான போட்டியில் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி அணி 3-0 புள்ளி கணக்கில் ஶ்ரீ சாய்ராம் தொழில்நுட்பக் கல்லூரி அணியை வெற்றி பெற்று மூன்றாம் இடத்தை பெற்றது.
இறுதிப் போட்டியில் எஸ்ஆர்எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரி அணி 3-0 என்ற புள்ளி கணக்கில் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியை வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றது.
இரண்டாம் இடத்தை மெட்ராஸ் தொழில் நுட்ப கல்லூரி அணி பெற்றது.