டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு உதவிதொகை வழங்கக்கோரி அம்பேத்கர் மக்கள் இயக்கம் முதலமைச்சருக்கு கோரிக்கை

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தகுதி தேர்வில் வெற்றியடைந்த ஆதி திராவிட மற்றும் பழங்குடி இன மாணவர்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் உதவித்தொகை இந்தாண்டு என்னும் வழங்கப்படவில்லை இது குறித்து அம்பேத்கர் மக்கள் இயக்க செயல் தலைவர் இளமுருகு முத்து தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார், அந்த கடிதத்தில், டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தகுதி தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து ஆதி திராவிட மற்றும் பழங்குடி இன மாணவர்களுக்கும் மெயின் தேர்வு எழுதுவதற்கு தாட்கோ மூலம் உதவி தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்தாண்டு தகுதி தேர்வு முடிந்து பல மாதங்கள் ஆகியும் என்னும் இந்த உதவி தொங்கல் யாருக்கும் வழங்கப்படவில்லை, இதற்காக தாட்கோ இணையதள பக்கதில் விண்ணப்பிக்க முயற்சித்த போது இணையத்தளத்தில் இப்பொழுது விண்ணப்பிக்க முடியாது என்ற செய்தி மட்டுமே வருகிறது.

தாட்கோ அலுவலகத்தில் தொடர்பு கொண்ட போது அவர்கள் அரசின் உத்தரவுக்காக காத்திருப்பதாக கூறுகிறார்கள். இதனால் 1000 க்கும் மேற்பட்ட ஏழை எளிய மாணவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆதலால் முதலமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு மாணவர்களுக்கு உதவி தொகை கிடைத்திட வழிவகை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் இளமுருகு முத்து குறிப்பிட்டுள்ளார்.

Author: ADmiNIstRAtoR