வியாசாவின் சமன்மைப் பொங்கல் என்ற பெயரில் இரண்டு நாள் கலை கட்டிய தமிழர் திருநாள் பொங்கல் விழா

சென்னை அடுத்த
புழுதிவாக்கத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பள்ளி வியாசா வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, இப்பள்ளியில்
37ம் ஆண்டு பொங்கல் விழா

மிகச் சிறப்பாக கோலாகலத்துடன் கொண்டாடினர்

இந்த பள்ளியில் ஒவ்வொரூ ஆண்டும் பொங்களுக்கு நல்ல கருத்துடைய தலைப்பினைத் தேர்ந்தெடுத்து விழா கொண்டாடப்படும் அந்தவகையில் இந்த ஆண்டு, வியாசாவின் சமன்மைப் பொங்கல்’ என்ற தலைப்பில் கொண்டாடப்பட்டது

இவ்விழாவின் சிறப்பு என்னவெனில், தாய், சேய், குரு என்று சேர்ந்து கொண்டாடுவது

இருபது பானைகள் பொங்க அனைவரும் சேர்ந்து கொண்டாடினர்

சிலம்பாட்டம் , மான்கொம்பாட்டம், கரகட்டம், கட்டக்கூத்து, கட்டைக்கால் ஆட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், பறை, தாரை தப்பட்டைை என்று பொங்கல் விழாக்களை கட்டியது

கலந்து கொண்ட கலைஞர்கள் மற்றும் உழைப்பாளர்களை ஊக்குவிக்கும் விதமாக பொங்கலுக்குத் தேவையான அத்துணைப் பொருட்களையும் கொடுத்து
பள்ளி முதல்வர் .சுந்தர் மற்றும் துணை முதல்வர் .பிரகாசவல்லி
ஆகியோர் மரியாதை செய்தனர்.

பின்பு பொங்கலை இறைவனுக்குப் படையிலிட்டு வழிபாடு செய்து மகிழ்ந்தனர்.

இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக மாணவர்களுக்கான பொழுது போக்கு விளையாட்டுகள், மாணவர்களே உருவாக்கிய கடை விதி அமைத்து விற்பனைச் செய்தனர் மாட்டு வண்டி ஏற்றம் திண்பண்டங்கள் என விழா இரண்டு நாட்களும் மாணவர்களுக்குப் பயனுள்ள வகையில் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Author: ADmiNIstRAtoR