கல்பாக்கம் அடுத்த வாயலூர் ஊராட்சியில் பழமைவாய்ந்த ஶ்ரீ அமிர்தாம்பிகை உடனுரை ஸ்ரீ புலிப்புரை ஈஸ்வரர் திருக்கோயில் மஹாகும்பாபிஷேகம் : ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வயலூர் ஊராட்சியில் பழமைவாய்ந்த அருள்மிகு ஸ்ரீ அமிர்தாம்பிகை உடனுரை புலிப்புரை ஈஸ்வரர் ஆலயம் சிதிலமடைந்து இருந்த நிலையில் கோவில் புரனமைக்கபட்டு புதியதாக ஆலயம், விமானமண்டபம், மஹாமண்டபம் மற்றும் விநாயகர், முருகர், தட்சணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, ஆதிநாதர், லோபா முத்திரை அகஸ்தியர், சண்டிகேஸ்வரர், பைரவர், நந்தீஸ்வரர் மற்றும் நவகிரக சன்னிதிகள் அமைக்கப்பட்டு அதற்கான கும்பாபிஷேக விழா கடந்த திங்கட்கிழமை காலை விநாயகர் பூஜையும் மாலை முதல்கால யாக ஹோமத்துடன் மஹா கும்பபாபிஷேகம் நிகழ்ச்சி துவங்கியது.
செவ்வாய்க்கிழமை காலை இரண்டாம் காலசாலை ஹோமம் பூஜை அடுத்ததாக அமிர்தாம்பிகை உடனுறை புலிப்புரை ஈஸ்வரர் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு விஷேச த்ரவ்ய ஹோமம் பூர்ணாஹீதி நடைப்பெற்றது. மாலையில் மூன்றாம் காலஹோமம் யாக பூஜையும், புதன்கிழமை காலை நான்காம் கால யாகஹோமம் பூஜை நடைப்பெற்று.
பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித கலசங்கள் புறப்பாட்டு கோயிலை சுற்றி வந்து ஆலய ஓம் நமச்சிவாய கோஷம் முழங்க சிவ வாத்தியங்களுடன் விமான மண்டப கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைப்பெற்றது.
அதனைத்தொடர்ந்து பரிவாரா மூர்த்திகளுக்கும் இறுதியாக கருவறையில் அமர்ந்துள்ள மூலவர் அருள்மிகு ஶ்ரீ அமிர்தாம்பிகை உடனுறை புளிப்புரை ஈஸ்வரருக்கு மஹாகும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
பின்பு பாலாபிஷேகம் அலங்காரம் தீபாராதனைகள் நடைபெற்றது தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சிவனை வழிபட்டனர்.


















