சென்னை, 29 டிசம்பர் 2025: சென்னையை அடுத்த பூந்தமல்லி, ருக்மணி நகரில் ரெவ்பியூட் ஸ்கின், ஹேர் மற்றும் எஸ்தெடிக் கிளினிக் என்பது அழகு, தோல் மற்றும் முடி பராமரிப்பில் புதிய தரநிலையை உருவாக்கும் நோக்குடன் தொடங்கப்பட்ட ஒரு நவீன மருத்துவ மையமாகும்.
இந்த கிளினிக் பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் முதன்முறையாக முழுமையான எஸ்தெடிக், ஸ்கின் மற்றும் ஹேர் சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் கிளினிக்காக உருவெடுத்துள்ளது.
இந்த கிளினிக்கை கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன் குமார் அவர்கள் சிறப்பு அழைப்பாள ராக கலந்து கொண்டு திறந்து வைத்தார்.
பின்பு பேசிய கிளினிக் நிறுவனர்
தோல் பிரச்சனைகள் இன்று பலரையும் பாதிக்கின்றது
முகப்பரு வடுக்கள் கரும்புள்ளிகள், சுருக்கங்கள், நிறமாற்றம், அதிக முடி உதிர்வு, முடி மெல்லிதல் போன்ற பிரச்சனைகளுக்கு அறிவியல் முறையில், பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தீர்வுகளை
ரெவ்பியூட் ஸ்கின், ஹேர் கிளினிக்
வழங்குகிறது.
மேலும், இயற்கையான அழகை மேம்படுத்த விரும்புவோரும் இங்கு நிபுணர்களின் ஆலோசனையுடன் சிகிச்சை பெறலாம்.
இந்த கிளினிக்கில் பயன்படுத்தப்படும் அனைத்து மருந்துகள் மற்றும் அழகு தயாரிப்புகளும் USFDA அங்கீகாரம் பெற்றவை ஆகும். அதேபோல், சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் கருவிகள் அனைத்தும் உயர் தர தொழில்நுட்பம் கொண்ட, உலகத் தரத்தில் பயன்படும் சாதனங்கள் ஆகும். இதனால் பாதுகாப்பும், சிறந்த முடிவுகளும் உறுதி செய்யப்படுகின்றன.
ரெவ்பியூட் ஸ்கின் கிளினிக் வழங்கும் சேவைகளில்
ஹைட்ராஃபேஷியல், லேசர் முடி அகற்றுதல், முடி மாற்று அறுவை சிகிச்சை, பச்சை குத்துதல், தோல் புத்துணர்ச்சி சிகிச்சைகள், வயதான எதிர்ப்பு நடைமுறைகள்,
மற்றும் பல்வேறு தோல் சிகிச்சைகள் அடங்கும். ஒவ்வொரு நோயாளிக்கும் அவர்களின் தேவைக்கேற்ற தனிப்பட்ட சிகிச்சை திட்டம் தயாரிக்கப்படுகிறது.
மேலும், இங்கு வழங்கப்படும் அனைத்து சேவைகளும் மிகவும் நியாயமான மற்றும் அனைவரும் அணுகக்கூடிய விலையில் வழங்கப்படுகின்றன.
மேலும் நடைபெற்ற இந்த விழாவில் TNCC மாநில பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆ.அருள் அன்பரசு , REEWA மாநில செயலாளர் S.M.குமார்,
REEWA மாநில இணைச்செயலாளர்
A.J.நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..



















