முதல்வரின் பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறேன் அவர்தான் எனக்கு நியாயம் வழங்க வேண்டும் முன்னாள் தாசில்தார் வேண்டுகோள்

தன்னுடைய நிலத்தை முன்னாள் திமுக அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் சகோதரர் தேவராஜ் என்பவர் அபகரிக்க முயற்சிப்பதாக முன்னாள் தாசில்தார் திருநாவுக்கரசு என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

கொரட்டூர் கிராமம், ஸ்டேஷன் ரோடு பகுதியில் தனக்கு சொந்தமான 14.5 ஏக்கர் நிலம் உள்ளதாகவும், அதில் 4 ஏக்கர் நிலத்தை தேவராஜ் அபகரிக்க முயற்சிப்பதாகவும் இதை அவர் தனக்கு தெரியாமலே அவர் பெயரில் பதிவு செய்து கொண்டதாகவும் இது சம்பந்தமாக அவர் ஏற்கனவே கமிஷனரால் கைது செய்யப்பட்டதாகவும் கூறினார்.

மேலும் இது சமந்தமான வழக்கு உச்சநீதிமன்ற 5 நீதிபதி அமர்வு முன்பு நிலுவையில் உள்ள நிலையில் , திமுக ஆட்சிக்கு வந்த உடன் அடியாட்களை சேர்த்துக் கொண்டு தன் நிலத்தை கைப்பற்ற முயற்சிகள் நடப்பதாகவும், இது குறித்து காவல் துறையிடம் முறையிட்ட பொழுது தங்களால் ஒன்றும் செய்ய இயலாது நீங்கள் மேல் அதிகாரிகளிடம் சென்று முறையிடுங்கள் என்று கூறுவதாகவும் தெரிவித்தார்.

மேலும் வயது மூப்பின் காரணமாக தேவராஜ் நேரடியாக இந்த கைப்பற்றும் முயற்சியில் இறங்கவில்லை என்றும் அவரின் சொந்தக்காரரான மதுசூதனன் என்பவர் அடியாட்களை வைத்து தன்னை மிரட்டுவதாகவும் தெரிவித்தார், மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் தன்னுடைய நெருங்கிய நண்பர் என்றும், இந்த சம்பவத்தை அவர் விரும்ப மாட்டார் எனவே அவரின் கவனத்திற்கு இதை எடுத்துச் சென்று நீதி கிடைக்க உதவி செய்யுமாறு கூறினார்.

Author: ADmiNIstRAtoR

16 thoughts on “முதல்வரின் பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறேன் அவர்தான் எனக்கு நியாயம் வழங்க வேண்டும் முன்னாள் தாசில்தார் வேண்டுகோள்

  1. Pingback: tải sunwin
  2. Pingback: The Deb
  3. Pingback: red eye cheats
  4. Pingback: my blog

Comments are closed.