ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் டிலேர்னர்ஸ் ஆய்வகத்தை திறந்து வைத்தார்

https://youtu.be/DDDC1mw_PKo?si=9dyNwEdNoB7E-yIe

தி.நகர்: ஆசிரியர் தினத்தை முன்னிட்டு
ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் டிலேர்னர்ஸ் ஆய்வகம் திறப்பு விழா சிறப்பாக நடைப்பெற்றது.

இந்த ஆய்வகத்தை தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு திறந்து வைத்தார்.

மேலும் இது மாணவர்களின் வாசிப்பு, எழுதுதல் மற்றும் எண் கணிதத்தில் அடிப்படை திறன்களை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய முயற்சியாகும்.

ஆசிரியர் தினம் என்பது எதிர்காலத்தை வடிவமைக்கும் கல்வியாளர்களின் முக்கிய பங்கை அங்கீகரிக்கும் நேரம். கல்வியை வழங்குவது மட்டுமல்லாமல், ஒவ்வொரு மாணவருக்கும் உள்ள தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்துவதும் ஆசிரியர்களின் பொறுப்பாகும். ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியின் முதல்வர் அருட். சகோதரி சேவியர் மேரி கூறுகையில், “டிலேனர்ஸ் ஆய்வகம் இந்த பணியின் விரிவாக்கமாகும், இது ஒவ்வொரு குழந்தையும், குறிப்பாக கற்றல் சிரமங்களைக் கொண்டவர்கள் செழிக்கக்கூடிய ஒரு சிறப்புச் சூழலை வழங்குகிறது” என்று தெரிவித்தார்.

மேலும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது துவக்க உரையில் பேசிய தாவது: மாணவர்களின் கல்வி, வெற்றி மற்றும் தன்னம்பிக்கையை வளர்ப்பதில் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பதை வலியுறுத்தி பேசினார் .

மேலும் மாணவர்கள் தங்கள் திறமையை கண்டறிய வழி காட்டுவதால் ஆசிரியர்களை நமது எதிர் காலத்தின் சிற்பிகள் என்றும், ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் அமைக்கப்பட்ட ஆய்வகம், குழந்தைகள் வெற்றி பெற உதவும் கருவிகளை ஆசிரியர்களுக்கு கொடுத்து, அவர்களை சிறந்த முறையில் பயிற்சியளிக்க உதவுகிறது.

இதன் மூலம் நாங்கள் ஆசிரியர்களுக்கு மிகுந்த ஆதரவு வழங்குகிறோம் என்று அவர் கூறினார்.

டிலேர்னர்ஸ் ஆய்வகத்தை மைக்ரோசாஃப்ட் ஆதரவுடன் வான்கார்ட் லாஜிஸ்டிக்ஸ் ஆகிய இரு நிறுவனங்களின் கூட்டுமுயற்சியாலா உருவாக்கப்பட்டது. இது கல்வியாளர்கள், அரசாங்கம், மற்றும் நிறுவனங்களின் ஒரு மைல் கல்லாகும். தமிழ்நாடு உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாற்றுக் கல்வி வழங்கும் ஒரு முயற்சியின் பகுதியாகும்.

ப்ளிங்க் ஃபவுண்டேஷன் மற்றும் டிலேர்னர்ஸ் நிறுவனர் அருண் பெர்னாண்டஸ், ஆசிரியர்களை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

மேலும் மாணவர்களின் அடிப்படை திறன்களை மேம்படுத்துவதன் மூலம், அவர்களுக்கு நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும், கல்வி வெற்றியை அடையவும் நாங்கள் உதவுகிறோம் என்றும் கூறினார்.

இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்கிய வான்கார்ட் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்திற்கும், இதை சாத்தியமாக்கிய மைக்ரோசாப்ட் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியின் செயலாளர் அருட். சகோதரி ரோசி ஜோசப், “இந்த ஆய்வகம் எங்கள் மாணவர்களுக்கு நம்பிக்கையின் ஒளியாக விளங்குகிறது. இந்தப் பள்ளியில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் வெற்றியடைய தேவையான ஆதரவைப் பெறுவது உறுதியாகிறது” என்றார்.

ஹோலி ஏஞ்சல்ஸ் பிராந்திய சுப்பீரியர் அருட். சகோதரி மரியா செல்வி, “அனைத்து குழந்தைகளும் அவர்களின் சவால்களைப் பொருட்படுத்தாமல், தரமான கல்வியைப் பெறுவதற்கு இந்நிறுவனங்கள் போன்ற முயற்சிகளை பிரதான பள்ளிகளில் ஒருங்கிணைக்க வேண்டியது அவசியம்” என்றார்.

SEEK அறக்கட்டளையின் நிறுவனர் விமலா பிரிட்டோ அவர்கள், பேசுகையில் அருண் பெர்னாண்டஸ் டிஸ்லெக்ஸியாவின் சவால்களை கடந்து இவ்வளவு சாதித்ததைக கண்ட ஒருவர், அவர் இந்த திட்டத்தைத் தொடங்கியதில் நான் நம்பமுடியாத அளவிற்கு பெருமைப்படுகிறேன். பலருக்கு உத்வேகமாகவும், எண்ணற்ற மாணவர்களுக்கு நம்பிக்கையின் ஒளியாக விளங்குகிறது என்றார்.”

ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் நிருவப்பட்டுள்ள இந்த ஆய்வகத்தின் திறப்பு விழா, உள்ளடக்கிய கல்விச் சூழலை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைப் பிரதிபலிக்கிறது.

தனிப்பட்ட கற்றல் பாணிகளைப் பொருட்படுத்தாமல், அனைத்து மாணவர்களுக்கும் சமமான கல்வியை வழங்குவதில் கல்வியாளர்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

Author: ADmiNIstRAtoR