வழக்கறிஞர்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த சட்ட நல அறக்கட்டளை சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள வெளியம்பாக்கம் இருளர் காலனி, நெடுங்கல் மற்றும் மின்னல் சித்தமூர் ஆகிய கிராமங்களில் பழங்குடியின வகுப்பை சேர்ந்த இருளர் இன மக்களுக்கு உதவி

செங்கல்பட்டு: பட்டியலின வகுப்பினர் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பூர்வக்குடி ஆதி தமிழர்களான பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த இருளர் இன மக்கள் ஐவகை நிலத்தில் ஒன்றான முல்லை நிலமான காடுகளில் வாழ்ந்தவர்கள். தங்களின் வாழ்வாதாரத்திற்காக மருத நிலமான மக்கள் வாழும் நிலப்பகுதியில் தங்குவதற்கு தகுந்த இருப்பிடமும், மின்சார வசதியுமின்றியும் தவித்து வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு வழக்கறிஞர்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த சட்ட நல அறக்கட்டளை சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள வெளியம்பாக்கம் இருளர் காலனி, நெடுங்கல் மற்றும் மின்னல் சித்தமூர் ஆகிய கிராமங்களில் உள்ள பழங்குடியின வகுப்பை சேர்ந்த இருளர் இன மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நிகழ்வு அறக்கட்டளையின் நிறுவன தலைவர் எஸ்.கே.சிவக்குமார் அவர்கள் , செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் எட்வர்ட் அவர்கள் முன்னிலையிலும் நடைப்பெற்றது.

மேலும் இந்நிகழ்வில் நெடுங்கல் கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவர் தேவநாதன் மற்றும் மின்னல் சித்தாமூர் கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவரூம் வழக்கறிஞருமான பாலாஜி ஆகியோர் அறக்கட்டளையின் நிர்வாகிகளோடு இணைந்து இருளர் இன மக்களுக்கு அன்றாட தேவைக்கான பொருட்களை வழங்கினர். இருளர் இன மூத்த குடி மக்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

மேலும் இதில் மாநில செயலாளர் ஜெகன், கொள்கை பரப்பு செயலாளர் ஹரி, செங்கல்பட்டு மாவட்ட துணைத்தலைவர் ஆறுமுகம், தொழிற் நுட்பப்பிரிவு தலைவர் ரமேஷ் கண்ணன், செயலாளர் அருண், துணை செயலாளர் அலெக்ஸ், சோழிங்கநல்லூர் ஒன்றிய தலைவர் எழில் மற்றும் நரேந்திரன், ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டத்தலைவர் நிதீஷ்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்வின் இறுதியில் இருளர் இன மக்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், அந்த பகுதியில் தாங்கள் தங்குவதற்கு தகுந்த இருப்பிடமின்றியும், உரிய மின்சார மின்றியும், தகுந்த வேலை வாய்ப்பின்றியும், தங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும் தெரிவித்தனர்.

அதுமட்டுமின்றி தங்களுக்கென சுடுகடோ இடுகடோ கூட இல்லையென வருந்துகினர். சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள தங்கள் வாழ்வாதரத்திற்கு உதவுமாறும்,
குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக உதவுமாறும் தமிழக முதல்வருக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர்.
மேலும் அவர்கள் எங்கள் கிராமங்களை கண்டறிந்து நேரில் வந்து உதவிக்கரம் நீட்டிய ஒருங்கிணைந்த சட்ட நல அறக்கட்டளை தலைவர் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

Author: ADmiNIstRAtoR

14 thoughts on “வழக்கறிஞர்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த சட்ட நல அறக்கட்டளை சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள வெளியம்பாக்கம் இருளர் காலனி, நெடுங்கல் மற்றும் மின்னல் சித்தமூர் ஆகிய கிராமங்களில் பழங்குடியின வகுப்பை சேர்ந்த இருளர் இன மக்களுக்கு உதவி

  1. Pingback: togel terpercaya
  2. Pingback: Dnabet
  3. Pingback: barber Melbourne
  4. Pingback: hihuay
  5. Pingback: fuck boy
  6. Pingback: best chat

Comments are closed.