பூந்தமல்லியில் உள்ள கோல்டன் ஒப்புலேன்ஸ் அடுக்குமாடி குடியிருப்பில் தமிழ்நாடு மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த 3500 கும் மேற்பட்டோர் வசித்துவருகின்றனர். இக்குடியிருப்பில் 79ம் ஆண்டு சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு கிருஷ்ணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அடுக்குமாடி குடியிருப்பில் நூலகத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். அவர் சார்பாக முத்தமிழ் அறிஞர் கலைஞர் எழுதிய நூல்கள் நூலகத்திற்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டது. இவ்விழாவை கோல்டன் ஒப்புலேன்ஸ் அடுக்குமாடி உரிமையாளர் சங்க செயலாளர் திரு யோகேஷ், தலைவர் திரு ஜோஷிராஜ், துணை செயலாளர் திரு அருண், துணை தலைவர் திருமதி வித்யா, பொருளாளர் திருமதி இப்சிதா, துணை பொருளாளர் திருமதி திவ்யா மற்றும் சங்கத்தின் செயற்குக்குழு உறுப்பினர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலும் கோல்டன் ஒப்புலென்ஸில் சுதந்திர தினத்தை ஒட்டி வேலப்பன்சாவடி மேத்தா மருத்துவமனை சார்பாக இலவச மருத்துவ முகாம் மற்றும் ரத்த தான முகாம் நடத்தப்பட்டது, இந்த முகாமை டாக்டர் தினேஷ் மற்றும் டாக்டர் லட்சுமணசாமி ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.
இந்த சுதந்திர தின விழாவானது இளம் தலைமுறைக்கு சுதந்திர தினத்தின் அருமையை பறைசாற்றும் விதமாக கொண்டாடப்பட்டதாக கோல்டன் ஒப்புலேன்ஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.





















