அனைத்து துறைகளிலும் காலத்தடம் பதித்து சாதித்து வரும் பிளாரன்ஸ் ஹெலன் நளினி ஒருபடி மேலே சென்று திருமதி உலக அழகி போட்டியில் பங்கேற்கிறார்

வறுமையால் மாணவர்களுக்கு டியூஷன் எடுக்கும் பணியில் தொடர்ந்து படிப்படியாக உயர்ந்து மனநல சிகிச்சை நிபுணர், தொழில் முனைவோர், எழுத்தாளர், மொழி பயிற்றுனர், யோகா பயிற்சியாளர் என அனைத்து துறைகளிலும் காலத்தடம் பதித்து சாதித்து வரும் பிளாரன்ஸ் ஹெலன் நளினி ஒருபடி மேலே சென்று திருமதி உலக அழகி போட்டியில் பங்கேற்கிறார்.

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தேற்றும் ஆலோசகர், மாணவர்களுக்கு கல்வி கற்கும் ஆசான், உடல்நலன் ஆலோசனை வழங்கும் சக தோழி, தமிழ் ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் வல்லமை பெற்று மொழியை பயிற்சிவிப்பதில் குரு, வாழ்வின் முன்னேற்றங்களுக்கு எழுத்துக்களில் ஊக்கமளிக்கும் சமூக செயற்பாட்டாளர், பெண்கள் தொழிலில் சுயமுன்னேற்றமடைய கைத்தூக்கி விட ஆதரவுக்கரம் நீட்டும் தன்னலம் பாரா பெண் என இப்படி பன்முகங்களை கொண்டவர் தான் பிளாரன்ஸ் ஹெலன் நளினி. கடந்த ஆண்டு பிரபலமாக பேசப்பட்டவர் இவர். எனெனில் சாதிப்பதிற்கு தடைகள் ஏது என்பதை நிரூபித்து திருமதி இந்தியா பட்டத்தை வென்று அசத்திவரே பிளாரன்ஸ் ஹெலன் நளினி.

சாதித்தவர்கள் அனைவரும் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்ததில்லை என்பதற்கு மற்றொரு உதாரணமாய் திகழ்பவர் தான் பிளாரன்ஸ் ஹெலன் நளினி. சிறுவயதில் வறுமையில் பிடியில் சிக்கியதால் குடும்ப செலவுக்காக தனதுக்கு தெரிந்த கல்வியை மாணவ, மாணவிகளுக்கு கற்பித்து அதன் மூலம் கிடைத்த பணத்தில் மேற்படிப்பை தொடர்ந்துள்ளார். படிக்கும் வேண்டும் என்ற ஆவல் பிளாரன்ஸ் ஹெலன் நளினியின் உள்ளத்தில் தீயாய் என்றும் எரிந்து கொண்டிருப்பதாலோ என்னமோ, இன்றும் ஒரு மாணவியாய் தொடர்ந்து படித்து வருகிறார். உளவியலில் ஆராய்ச்சி படிப்பை தொடர்ந்து வரும் பிளாரன்ஸ் ஹெலன் நளினி, வெறிக்கொண்டு ஆங்கிலம், பிரெஞ்சு, தமிழ் ஆகிய மொழிகளை பயின்று, ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு படிக்கவும், எழுதவும், பேசவும் கற்றுக் கொடுத்து வருகிறார்.

இப்படி தனது வாழ்க்கை பயணத்தில் சென்று கொண்டிருந்த பிளாரன்ஸ் ஹெலன் நளினிக்கு புதிய பாதையை காட்டியுள்ளார் அவரது இளைய மகள் சரிஹா. திருமதி அழகிக்கான போட்டியை மகள் கூற பிளாரன்ஸ் ஹெலன் நளினி தெரிந்து கொண்டார். பேஷன் டிசைனிங் அல்லது மாடலிங் பற்றி எதுவுமே தெரியாமல் தன் மீதும், தனது குடும்பம் அளித்த ஊக்கத்தினாலும் அந்த பாதையிலும் கால்தடம் பதிக்க விரும்பியுள்ளார். அதனால், கடந்த ஆண்டு அமெரிக்க-இந்திய கூட்டு முயற்சியால் நடைபெற்ற ‘மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்’ அழகிப் போட்டியில் பங்கேற்றார். மொத்தமாக மூவாயிரம் பேர் பங்கேற்ற போட்டியில் இறுதியாக 52 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில், தமிழகத்தில் இருந்து தேர்வானது பிளாரன்ஸ் ஹெலன் நளினி மட்டுமே. மும்பையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 2021-ம் ஆண்டுக்கான ‘மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்’ பட்டத்தை பிளாரன்ஸ் ஹெலன் நளினி வென்றார். அதேபோல், ‘கிளாமரஸ் அச்சீவர்’ என்ற துணைப் பிரிவிலும் பட்டத்தை வென்று அசத்தினார்.

இந்த பட்டத்தை பிளாரன்ஸ் ஹெலன் நளினி எளிதாக வென்றிட வில்லை. ஏனெனில் 2021ம் ஆண்டு இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. கொரோனாவினாலும், நிமோனியா காய்ச்சலாலும் கடுமையாக பாதிக்கப்பட்ட பிளாரன்ஸ் ஹெலன் நளினி, ஒரு மாதமாக மரணத்தை வாயிலை தொட்டு விட்டு திரும்பினார். எனினும், அவரது கணவரும், மகள்களும் தந்த ஊக்கம் மற்றும் தன் மீது கொண்டிருந்த நம்பிக்கையால் கொடிய நோயையும் எதிர்த்து போரிட்டு மீண்டு வந்தார். அதன்பின்னரே நடனம், உடற்பயிற்சி, நீச்சல், யோகா என திருமதி அழகி போட்டிக்கு தன்னை தயார்ப்படுத்தி பட்டத்தை வென்று அசத்தினார்.

இந்த நிலையில், அடுத்த வாரம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் நடைபெற உள்ள திருமதி உலக அழகி போட்டியில் ‘மிஸஸ் இண்டர்நேஷனல் வேர்ல்ட் கிளாசிக்-2022’ என்ற பட்டத்துக்காக இந்தியா சார்பில் பிளாரன்ஸ் ஹெலன் நளினி மிளிர உள்ளார். இந்த போட்டியின் ஒரு பகுதியாக கடந்த மாதம் நடைபெற்ற சமூக ஊடகத்தை எதிர்கொள்ளும் போட்டியில் பங்கேற்று தனது முத்திரையை பதித்துள்ளார். இந்த போட்டியில் 70க்கும் மேற்பட்ட நாட்டை சேர்ந்த பெண்கள் பங்கேற்க உள்ளனர். அவர்களை வென்று பிளாரன்ஸ் ஹெலன் நளினி திருமதி உலக அழகியாக மகுடம் சூட நாமும் வாழ்த்துவோம்…

Author: ADmiNIstRAtoR

13 thoughts on “அனைத்து துறைகளிலும் காலத்தடம் பதித்து சாதித்து வரும் பிளாரன்ஸ் ஹெலன் நளினி ஒருபடி மேலே சென்று திருமதி உலக அழகி போட்டியில் பங்கேற்கிறார்

  1. Pingback: bio ethanol burner
  2. Pingback: k2 where to buy,
  3. Pingback: w69
  4. Pingback: Jaxx Liberty
  5. Pingback: Diyalaa

Comments are closed.