மும்பையில் 1997 ஆம் ஆண்டு பிரேம் கணபதி என்பவரால் துவக்கப்பட்டு இந்தியா , நியூசிலாந்து , ஆஸ்திரேலியா என உலகம் முழுவதும் சுமார் 70க்கும் மேற்பட்ட இடங்களில் பிரபலமாக இயங்கிவரும் தோசா ப்ளாசா ரெஸ்டாரன்ட் உணவகம் சென்னை பல்லாவரம் தர்கா சாலையில் ஏ.வி.என். பால்ராஜ் மூலம் தனது முதல் கிளையை தொடங்கி உள்ளது .
இதன் திறப்பு விழா பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி தலைமை நடந்தது. நிகழ்ச்சியில் ஊரகத் தொழில் துறை அமைச்சரும் காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டு ரெஸ்டாரண்ட் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நக்கீரன் கோபால் ,லயன் டாக்டர் என்.ஆர். தனபாலன் ,ஜாகுவார் தங்கம், தமிழ்நாடு கல்குவாரி சங்க செயலாளர் ஆர். ஜெயராமன் , ஜோதிடக்கலை அரசு ஆதித்யகுருஜி, காமாட்சியம்மன் சிட் ஃபண்ட் கரு. சின்னதுரை நாடார் , பல்லாவரம் வட்டார நாடார் ஐக்கிய சங்க பொதுச் செயலாளர் தனம் (எ)ராமச்சந்திரன், ஜே.டி.எம் கன்ஸ்ட்ரக்ஷன் இ. ஜோசப் அண்ணாதுரை, மும்பை நாடார் சங்க செயலாளர் பேலஸ் துரை, தொழிலதிபர் பம்மல் கருப்பையா காந்தி, ஆஸ்திரேலியா இயக்குனர் சாலை கனகதாரன், தொழிலதிபர் பல்லாவரம் பி. ராஜ்குமார், வி .எஸ். எஸ் . சந்திரன் , திமுக வர்த்தக அணி இணைச் செயலாளர் பி.டி .பாண்டி செல்வம், ஏ. எம் .பி . மூர்த்தி நாடார், அரிமா பி. பாக்கியலட்சுமி, டாக்டர் ஏ. ராமலிங்கம் , தொழிலதிபர் பல்லாவரம் பி.சிவாஜிராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவுக்கு வந்து கலந்து கொண்டவர்களை பிரேம் கணபதி பால்ராஜ் ஆகியோர் வரவேற்றனர்.



















11 thoughts on “பல்லாவரத்தில் தோசா ப்ளாசா உணவகத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்துவைத்தார்”
Comments are closed.