- மாநிலம் தொடர்பான எஃப்ஐசிசிஐ பல்வேறு திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி மகிழ்வுடன் இணைந்து செயல்படத் தயார் – தமிழக ஐடி மற்றும் டிஜிடல் சேவைகள் அமைச்சர்
- கண்டுபிடிப்பு மற்றும் ஆர்&டி மையமாகத் தமிழகம் திகழும் – எஃப்ஐசிசிஐ தலைவர்
சென்னை: 2023 ஏப்ரல் 29 : எஃப்ஐசிசிஐ தேசிய செயற்குழு கூட்டத்துக்கு மாண்புமிகு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வருகை தந்து சிறப்பித்தார். அவருடன் தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிடல் சேவைகள் அமைச்சர் டி மனோ தங்கராஜ் மற்றும் தமிழக நுண் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சர் தா மோ அன்பரசன் ஆகியோரும் வந்திருந்தனர்.
‘2030-31க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக தமிழ்நாடு முன்னேறுவதைத் துரிதப்படுத்துவது தொடர்பான எஃப்ஐசிசிஐ – டெல்லாயிட் அறிவுசார் ஆய்வறிக்கையை’ முதல்வர் வெளியிட்டார்.
கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழக அரசு ஐடி மற்றும் டிஜிடல் சேவைகள் அமைச்சர் டி மனோ தங்கராஜ் தகவல் தொழில்நுட்பத் துறையில் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியையும், பிராண்ட் தமிழ்நாடு உருவாக்கும் இலக்கு தொடர்பான கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்தும் விளக்கினார்.
அமைச்சர் மனோ தங்கராஜ் மேலும் தொடர்கையில் ‘கல்வி, தொழில்நுட்பம், கட்டமைப்பு ஆகிய துறைகளில் தமிழகம் முன்னணி வகிக்கிறது. உலகளவிலான சவால்களை சந்திக்க அனைத்து முனைவுகளையும் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் அதி நவீன ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் தொழில்நுட்பன் வசதிகளுடன் கூடிய ஆய்வகளங்களை உருவாக்குவதன் மூலம் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் ஐடி துறை தீவிர் கவனம் செலுத்துகிறது. மாநிலம் தொடர்பான எஃப்ஐசிசிஐ அனைத்து திட்டங்களுக்கும் தமிழக அரசு ஒத்துழைப்பு அளித்து மகிழ்வுடன் இணைந்து செயலாற்றும்’ என்றார்.
எஃப்ஐசிசிஐ தலைவர் சுப்ரகாந்த் பாண்டா கூறுகையில் ‘நாட்டின் 15% முனைவர் மற்றும் 11% முதுநிலைப் பட்டதாரிகள் தமிழகத்தில் இருப்பது குறிப்பிடத்தக்க விஷயம். இதன் காரணமாக மாநிலம் புதுமையான கண்டுபிடிப்புகள் மற்றும் ஆய்வு & வளர்ச்சிக்கான மையமாக உண்மையிலேயே திகழும். ஆட்டோமொபைல், ஜவுளித் துறைகள் உள்ளிட்ட வலுவான பாரம்பரியத் தொழில்களுடன், இரசாயனம் மற்றும் சிறப்பு இரசாயனங்களிலும் ஏராளமான வாய்ப்புகள் தமிழகத்துக்கு உள்ளன. ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாநிலம் உருவாக வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலினின் அரசின் திட்டங்களுக்கு நாங்கள் என்றென்றும் துணை நிற்க உறுதி அளிக்கிறோம்’ என்றார்.
எஃப்ஐசிசிஐ முன்னாள் தலைவர் மற்றும் ஜி20 எம்பவர் தலைவருமான டாக்டர் சங்கீதா ரெட்டி வளர்ச்சியின் எல்லாக் கட்டங்களிலும் பெண்கள் தங்களுக்கு உரிய அங்கீகாரத்தைப் பெற வேண்டிய வழிகளை வலியுறுத்தினார். அவர் மேலும் தொடர்கையில் ‘சிறந்த நடைமுறைகள் மற்றும் அனைத்துச் சாத்தியப்படும் வழிகளிலும் உலகளாவிய வகையில் காட்சிப்படுத்தும் பெண்கள் பற்றிய பாலின அடிப்படை கொண்ட அறிக்கையை ஜி20 எம்பவர் கட்டமைப்பு உருவாக்கும்’ என்றார்.
எஃப்ஐசிசிஐ மூத்த துணைத் தலைவர் டாக்டர் அனீஷ் ஷா கூறுகையில் ‘திறமையானவர்களைக் கொண்ட தமிழகம் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்னும் தொலைநோக்குத் திட்டத்தையும், இலக்கையும், பல்துறை வளர்ச்சி மூலம் எளிதில் எட்டலாம். இந்த இலக்கை எட்ட மாநில அரசுடன் இணைந்து எஃப்ஐசிசிஐ பணியாற்றும்’ என்றார்.
எஃப்ஐசிசிஐ துணைத் தலைவர் ஹர்ஷ வர்த்தன் அகர்வால் மாநிலம் வளர்ச்சி பெற ரியல் எஸ்டேட், ஐடி, கட்டமைப்பு மற்றும் ஏனைய துறைகளில் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.
எஃப்ஐசிசிஐ தமிழ்நாடு மாநில கௌன்சில் தலைவர் ஜி எஸ் கே வேலு பல்வேறு துறைகளில் தமிழகம் செய்த சாதனைகளைப் பட்டியலிட்டதுடன், அனைத்துத் துறைகளுக்குமான முதலீட்டு மாநிலமாக விளங்குவதையும் சுட்டிக் காட்டினார்.
எஃப்ஐசிசிஐ செக்ரடரி ஜெனரல் சைலேஷ் கே பதக் பேசுகையில் ‘அனைத்துப் பிரிவுகளிலும் முன்னேற்றம் பெறத் தேவையான எல்லா ஆதாரங்களும், திறமைகளும் தமிழகத்திடம் உள்ளன. எனவே, வருங்காலங்களில் இந்தியாவின் வளர்ச்சிக்கு மாநிலம் தன்னால் இயன்ற பங்களிப்பை மேலும் வழங்குமென உறுதியாக நம்புகிறேன். டிஜிடல் வளர்ச்சி மற்றும் மின்-வணிகத்தைப் பயன்படுத்த மாநில அரசுக்குத் தனியார் துறை உதவும்’ என்றார்.
‘2030-31க்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக தமிழ்நாடு முன்னேறுவதைத் துரிதப்படுத்துவது தொடர்பான எஃப்ஐசிசிஐ – டெல்லாயிட் அறிவுசார் ஆய்வறிக்கை நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. தற்போதுள்ள பலம் மற்றும் போட்டி அனுகூலங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தித் தமிழ்நாடு தனது பொருளாதாரத்தை சிறப்பாக மேம்படுத்த மூன்று மூலோபாய முக்கியப் பிரிவுகள் அறிக்கையில் அடையாளம் காட்டப்பட்டுள்ளன. ஒரு டிரில்லியன் என்னும் பொருளாதாரத்தை மேம்படுத்த இந்த மூன்று முக்கியத் துறைகள் மிகப் பெரிய விளைவை ஏற்படுத்தும். அறிக்கை அடையாளம் காட்டிய மூன்று முக்கியப் பிரிவுகள்
- தமிழகத்தில் தயாரி : தமிழகத்தின் தயாரிப்புத் தள வலுவாக்கம் மற்றும் பிறவாக்கம்
- பிராண்ட் தமிழ்நாடு : ஏற்றுமதி பிறவாக்கம் மற்றும் சுற்றுலா
- வழிநடத்தும் தமிழகம் : வளரும் தொழில்நுட்பங்கள் மற்றும் நிலை நிறுத்தத்தக்க நடைமுறைகளில் முன்னிலை வகிக்க தமிழகத்துக்கு அதிகாரம் வழங்கல்