தர்ஷன் கிளப்பின் மகளிர் பிரிவான தர்ஷன் கி சாக்கியான் அமைப்பின் சார்பாக அந்தாக்சி சீசன்-2 நிகழ்ச்சி சென்னை வாணி மஹாலில் நடைபெற்றது

அந்தாக்சி என்பது பாலிவுட் பாடலின் கடைசி சொல்லை அடுத்தவர் முதல் வார்த்தையாக பயன்படுத்தி பாடலை பாட வேண்டும். இதில் இன்னும் புதிய யுக்தியை பயன்படுத்தி இப்போட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இது குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ராஜேஷ் கூறியதாவது:-
இப்போட்டியில் 64 அணிகள் பங்குகொண்டனர். இதில்
அரையுறுதியில் 16 அணிகள் தேர்வாகி, இறுதி போட்டியில் நான்கு அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு
முறையே வின்னர், ரன்னர், 2nd ரன்னர், நான்காவதாக ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது . இப்போட்டி தர்ஷன் கி சாக்கியான் மகளிர் அமைப்பு முழுவதுமாக நடத்தியது.

இந்நிகழ்ச்சியை காண பார்வையாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்றார். பின்னர் மகளிர் அமைப்பின் தலை நிர்வாகி சந்தியா மேத்தா கூறுகையில், எங்கள் தர்ஷன் சாக்கியான் அமைப்பு சமூக தொண்டுகள் பல செய்து வருகிறது இதில் குறிப்பாக அன்னதானம் வசதியற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணம் அளிப்பது போன்ற எங்களால் முடிந்த சேவைகளை சேவைகளை செய்து வருகிறோம். இது முழுக்க முழுக்க மகளிர் அமைப்பின் மூலமாக செய்து வருவது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த அமைப்பில் 70 பெண் உறுப்பினர்கள் உள்ளனர் .இவர்கள் பெரும்பான்மையோர் தொழில் முனைவோர்களாக செயல்படுகின்றனர். இதில் கிடைக்கும் வருவாயிலிருந்து இச்சேவையை செய்து வருகிறோம் என்றார்.

Author: ADmiNIstRAtoR