முன்னணி பொழுதுபோக்கு ஊடக நிறுவனமான SS Music மற்றும் Business Development Forum MARC (Connect to Convert) நிறுவனங்கள் இணைந்து சென்னையில் மிகப்பெரிய கிரிக்கெட் போட்டியை நடத்துகின்றது. மே 28 மற்றும் 29 என இரண்டு நாட்கள் நடக்கும் இந்த கிரிக்கெட் போட்டி சென்னை டி.பி ஜெயின் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது.
16 அணிகள் பங்கேற்றுள்ள இந்த கிரிக்கெட் தொடரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு சுழல் கோப்பையும், ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்படும். இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு சுழல் கோப்பையும், ரூ.50,000 பரிசுத் தொகையும் வழங்கப்படும்.
இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக SS Music மற்றும் MARC இணைந்து நடத்தும் இந்த கிரிக்கெட் போட்டியின் துவக்க விழாவில் MARC நிறுவனத்தின் இயக்குனர் சரவணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி, நடிகர் மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் கலந்துக்கொண்டு கிரிக்கெட் போட்டியை துவக்கி வைத்தார்கள்.
இன்று (மே 28) நடைபெறும் லீக் போட்டியில் வெற்றி பெறும் நான்கு அணிகள் அரையிறுதிக்குள் நுழையும், அரையிறுதியில் வெற்றி பெறும் இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும்.
தற்போது லீக் போட்டிகள் நடந்துகொண்டிருக்கிறது, நாளை (மே 29) அரையிறுதிப் போட்டிகளில் வெற்றி பெறும் இரண்டு அணிகளும நாளை (மே 29) அன்றே இறுதிப் போட்டியில் மோதும்.
இந்த போட்டியின் அசோசியேட் ஸ்பான்ஷராக அரோ மாமிவும், ரேடியோ பார்ட்னராக ஹலோ எப்.எம் 106.4 உள்ளனர்.






















17 thoughts on “முன்னணி பொழுதுபோக்கு ஊடகம் SS Music மற்றும் Business Development Forum MARC இணைந்து நடத்தும் கிரிக்கெட் போட்டி – வெற்றி பெறும் அணிக்கு ரூ.1 லட்சம் பரிசு”
Comments are closed.