சென்னை வேளச்சேரியில் சட்டமேதை புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் அம்பேத்கார் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது

கல்லூரி மாணவர் அணி பொறுப்பாளர் மோனீஷ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் கலந்து கொண்டு அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து மக்களின் தாகத்தைத் தணிப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் இளைஞர்கள் பெண்கள் முதியோர்களுக்கு தர்பூசணி, வெள்ளரிக்காய் உள்ளிட்ட பழங்களும் மற்றும் இயற்கை குளிர்பானங்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொகுதி செயலாளரும் வழக்கறிஞருமான இளையா, வட்ட செயலாளர் பெருமாள், வட்ட பொருளாளர் ஜெகன், வட்ட பொறுப்பாளர் அப்பு (எ) இளையராஜா, முற்போக்கு மாணவர் கழக பொறுப்பாளர்கள் கவி, ரூபேஷ், மணி, பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Author: ADmiNIstRAtoR

14 thoughts on “சென்னை வேளச்சேரியில் சட்டமேதை புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பில் அம்பேத்கார் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது

  1. Pingback: her response
  2. Pingback: Food Recipes

Comments are closed.