அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் மாநகரில் அமைந்துள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவ அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த இருக்கையை அமைக்க, திருமிகு சாம் கண்ணப்பன் அவர்கள் தலைமையில் அதற்கான ௫15 கோடி மதிப்பிலான நிதி திரட்டும் முன்னெடுப்புகள் கடந்த 2-3 வருடங்களாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது. முன்னெடுப்புகளின் அங்கமாக நமது தமிழ் இருக்கை குறித்தான தகவல்கள் பொதிந்த தமிழ் செயலியை (6) உருவாக்கியுள்ளோம்.
டிசம்பர் 12, 2021 அன்று மாலை 6:30 மணிக்கு விஜிபி உலகத் தமிழ் சங்கத்தின் தலைவர் மற்றும் தமிழ் இருக்கையின் இந்திய ஆலோசகர், முனைவர் திரு. வி.ஜி. சந்தோசம் அவர்களின் முன்னிலையில், மாண்புமிகு தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், திரு. மனோ தங்கராஜ் அவர்கள் தலைமை ஏற்று செயலியை இணையவழியில் வெளியிட இசைந்துள்ளார். வடஅமெரிக்க தமிழ்ச் சங்க பேரவையின் தலைவர் திருமிகு.கால்டுவெல் வேல்நம்பி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.
ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கையின் அவசியத்தையும், அதனால் நாமும் நம் மொழியும் எதிர்நோக்கியிருக்கும் மேன்மைகளையும் பற்றி தங்கள் கைப்பேசியின் மூலமாகவே மிக எளிதில் அறிந்து கொள்ள இந்த செயலி ஒரு பெரும் வாய்ப்பாக அமையும்.
தமிழ் மொழியின் சிறப்புகள் பொதிந்த இணைய தமிழ் நூலகம், தமிழ் நாட்காட்டி
குறிப்புகள், தமிழ் எழுத்து வரைவுகள் ஆகியவற்றை இந்த செயலி மூலம் மிக எளிதில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த செயலி மூலம் சமூக வலைதளங்கள் மற்றும் மின்னஞ்சல் வழியே இருக்கையின் நிர்வாகக்குழுவினரான எங்களை எந்நேரத்திலும் எளிதில் தொடர்பு கொள்ள வழிவகையும் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் இருக்கையை நிறுவ தங்களால் ஆன நிதியுதவியை தங்கள் விருப்பம் போல் அளித்தும் உதவலாம். அனைத்துலக தமிழ்ச் சங்கங்களும், ஈகையாளர்களும். புரவலர்களும் அள்ளித் தந்து ஆதரிக்கும்படி அன்போடு வேண்டிக் கொள்கிறோம்.
தமிழ் இருக்கைக்கு தங்களால் இயன்ற நன்கொடையை வழங்கும் வகையில் எளிய
முறையில் தாங்கள் நிதியளிக்க வழிவகைகளும் இச்செயலியில் செய்யப்பட்டுள்ளது.
ஆதரவு தாருங்கள்… அள்ளித் தாருங்கள்!
இயன்றதை தந்து இருக்கையை அமைப்போம். “தமிழே அழகு!!! தமிழே நிறைவு!!!





















15 thoughts on “தமிழ் இருக்கையின் செயலியை தமிழ் மொழியில் வெளியிடும் நிகழ்ச்சி”
Comments are closed.