ஐந்து வயது சென்னை சிறுமி நிரஞ்சனா ஸ்ரீ, கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்

தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த ஐந்து வயது நிரஞ்சனா ஸ்ரீ (பிறப்பு மே 22 2016 ) கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

ஆங்கில எழுத்துக்கள், 10 வகையான பழமொழிகள், வீட்டு மற்றும் காட்டு விலங்குகள் மற்றும் ரசாயன பெயர்கள் மூன்று வகையான பட்டுப்புழுக்கள், மூன்று வகையான கொசுக்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 1 முதல் 100 வரையிலான எண்கள், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வாரத்தின் நாட்கள் 12 மாதங்கள் பெயர்கள், தமிழ் உயிர் மற்றும் மெய்யெழுத்துக்கள், போக்குவரத்து வாகனங்கள், தொழில்கள் பெயர்கள், அனைத்து இந்திய பிரதமர்கள், தமிழக முதல்வர்கள், தமிழக ஆளுநர்கள், இந்திய ஜனாதிபதிகள் பெயர்களை கூறுவது என பல்துறை அறிவு திறமையை போற்றும் வகையில் கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

நிரஞ்சனாஸ்ரீ தாயார் சவிதா கூறும்போது நிரஞ்சனாஸ்ரீ 2 வயது முதலே பொருட்களின் பெயர்களை கூறும் ஞாபக சக்தி இருப்பதை உணர்ந்தோம். அதன் பிறகு சிறு சிறு பயிற்சிகள் மூலம் பொது அறிவை வளர்த்தோம். கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தின் மூலம் நிரஞ்சனாஸ்ரீ வெளி உலகுக்கு தெரிவது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

மேலும் தந்தையார் ராஜா கூறும்போது , நான் மத்திய பாதுகாப்பு அமைச்சக பொதுப்பணித்துறையில் பணி புரிந்து வருகிறேன். நான் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் கட்டி பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவன். நான் பணி நிமித்தமாக சென்னைக்கு வந்ததினால் என் பிள்ளையின் திறமையை கண்டறிந்து கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட் சாதனை புத்தகத்தில் இடம்பெற செய்தோம்.

இதுபோல் பல்லாயிரம் குழந்தைகள் வசதி வாய்ப்புகள் இன்றி கிராமப்புறங்களில் வெளிச்சத்துக்கு வராமல் இருக்கிறார்கள். நிரஞ்சனா ஸ்ரீயின் சாதனையை தெரிந்துகொள்பவர்கள், அவர்களின் பிள்ளைகளின் திறமையை கண்டறிந்து வெளிக்கொண்டுவர ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே என் ஆவல் என்று கூறினார்.

Author: ADmiNIstRAtoR

11 thoughts on “ஐந்து வயது சென்னை சிறுமி நிரஞ்சனா ஸ்ரீ, கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்

  1. Pingback: brians club CVV
  2. Pingback: ufabtb
  3. Pingback: dee88
  4. Pingback: Science
  5. Pingback: free chat
  6. Pingback: lion123 vip
  7. Pingback: chat with models
  8. Pingback: BAU

Comments are closed.