அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய குழு சார்பில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்திய திருநாட்டின் 75-சுதந்திர தின விழா நிகழ்ச்சி, இன்று காலை 8.30 மணி அளவில் சென்னை வளசரவாக்கத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை FAIRA கூட்டமைப்பின் நிறுவனர்-தேசிய தலைவர் திரு.ஆ.ஹென்றி அவர்கள் தலைமையேற்று, மிகுந்த பெருமையோடு கூட்டமைப்பின் தலைவராக தொடர்ந்து பன்னிரண்டாம் ஆண்டாக, மூவர்ண தேசியக்கொடியை ஏற்றி, சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்து வீரவணக்கம் செலுத்தினார்.
தொடர்ந்து இந்திய விடுதலைக்கு வித்திட்டு, உறுதியோடு போராடி உதிரத்தை சிந்தி, தன்னுயிரை நீத்த சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியை தேசிய செயல் செயலாளர், கிங்மேக்கர் நிறுவனத்தின் சேர்மன் திரு.எஸ்.ராஜசேகர் அவர்கள் மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.
கிங் மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கி விடுதலைத் திருநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்ததோடு, காலை உணவும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தேசிய பொருளாளர் திரு.சந்திரசேகர், தேசிய நிர்வாக செயலாளர் திரு.ஜெயச்சந்திரன், பெருமைமிகு புரவலர் உறுப்பினர் திரு.G.ரமேஷ், தலைமை நிலையச் செயலாளர் திரு.R.கார்த்திக், செய்தி தொடர்பாளர் திரு.K.பொன்குமார், லே-அவுட் புரமோட்டர்ஸ் அமைப்பு மாநிலத் துணைத் தலைவர் திரு.கா.மொய்தீன், மாநில அமைப்புச் செயலாளர் திரு.S.V.ரவி, மேலாளர் திரு.R.சிவகுமரன், செயற்குழு உறுப்பினர் திரு.தினகரன், மத்திய சென்னை மாவட்ட துணைத் தலைவர் திரு.பிரபாகர், வடசென்னை மாவட்ட துணை தலைவர் திரு.தமீம், தென்சென்னை மாவட்ட துணைத் தலைவர் திரு.உமாபதி மற்றும் மாநில, மாவட்ட, தாலுக்கா குழு பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், மற்றும் கிங் மேக்கர்ஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் என 200 பேர் கலந்து கொண்டு சுதந்திர தின விழாவை மகிழ்வுடன் கொண்டாடி சிறப்பித்தனர்.





















12 thoughts on “அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய குழு சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்”
Comments are closed.