அன்பு பாலத்தின் கோரிக்கையை ஏற்று 22.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரண பொருட்களை அரிமா சங்கத்தினர் ஸ்டான்லி அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கினர்.
சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் பள்ளியில் நடைபெற்ற மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் அரிமா சங்கத்தின் சென்னை மாவட்ட ஆளுநர் மாணிக்கம் மற்றும் அரிமா சங்கத்தின் பன்னாட்டு இயக்குனர் சண்முகம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கொரோனாகா நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பல்வேறு மருத்துவ உபகரணங்கள் தேவைப்படுவதாக அன்பு பாலம் மூலம் அரிமா சங்கம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட அரிமா சங்கத்தினர் ரூ. 7.5 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்கள் மற்றும் ரூ.15 லட்சம் மதிப்பில் கரும்பூஞ்சை உள்ளிட்ட நோய்களுக்கு மருத்துவம் செய்யப்படும் தேவையான தீவிர மருத்துவ சிகிச்சை உபகரணங்கள் உள்ளிட்டவற்றை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வழங்கினார்.
பேட்டி- மாணிக்கம், அரிமா சங்கம், சென்னை மாவட்ட ஆளுநர்.
அதேபோல், இந்நிகழ்வில் மயிலாப்பூரில் உள்ள செவித்திறன் குறைபாடு உடைய பள்ளி மாணவர்கள் பயிலும் பள்ளியில் பெண் மாணவிகளுக்கு இரண்டு கழிப்பறைகள் கட்டி தரவும், 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் தொட்டியை அமைத்து தரவும் அன்பு பாலம் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது அதையும் அரிமா சங்கத்தினர் ஏற்றுக்கொண்டுள்ளனர்.





















8 thoughts on “மருத்துவ உபகரணங்கள் 22.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை அரிமா சங்கத்தினர் ஸ்டான்லி அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கினர்”
Comments are closed.