காவேரி மருத்துவமனை ஆக்சிஜன் தேவைகளை எதிர்கொள்ள சுய-சார்புநிலையை பெற்று சாதனை

சென்னை: காவேரி மருத்துவமனை தனது நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாமல் தடங்களற்ற சிகிச்சை வழங்குதல்  இருப்பதை உறுதி செய்வதற்காக சுயசார்பு ஆக்சிஜன் தயாரிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு இரு பெரிய ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரங்களை தனது மருத்துவமனை வளாகத்திற்குலேயே காவேரி மருத்துவமனை நிறுவியிருக்கிறது.

வெறும் இரண்டு மாதங்களுள்ளேயே இந்தபுதிய தொழில்நுட்பம் மொத்த ஆக்சிஜன் தேவையில் 60 சதவீதம்  பூர்த்தி செய்திருக்கிறது.

உயிர் காக்க பயன்படும் மருத்துவ ஆக்சிஜன் இந்த யூனிட்கள் மூலம் தயாரிக்கப்படுகின்றன.

ஒருங்கிணைந்த இந்தயூனிட்கள் அதிக பட்சமாக இருநூற்றி ஐம்பது நோயாளிகளுக்கு  தேவையான ஆக்சிஜனை, 700 லிட்டருக்கும் (LPM) அதிகமாக வழங்குகிறது.

ஒரு முன்னணி சங்கிலி தொடர்மருத்துவமனை நிறுவனம் இதுமாதிரியான ஆக்சிஜன் செறிவூட்டிகளை திறன்மிக்க மேலாண்மையுடன் ஒரு வலுவான சுகாதார பராமரிப்பு அமைப்பினை கட்டமைப்பு செய்யும் நோக்கத்தின் ஒரு மிகப்பெரிய முன்னேற்ற நடவடிக்கையாகும்.மேலும் ஆக்சிஜன் தேவைப்படுபவர்களுக்கு 24மணி நேரமும் கிடைக்குமாறு  செய்வதே இதன் கூறிய நோக்கமாகும்.

மருத்துவமனையின் செயலாக்க இயக்குனர் டாக்டர்.அரவிந்தன்செல்வராஜ் கூறியதாவது: நோயாளிகளின் தேவைகளை முழுமையாக  பூர்த்திசெய்யவும் தடங்கலற்ற மருத்துவ ஆதரவை உறுதி செய்யவும்  ஆக்சிஜன் உற்பத்தி செய்கின்ற இரு உற்பத்தி நிலையங்களை எமதுவலகத்திற்குள்ளே நாங்கள் நிறுவியிருக்கின்றோம். இந்த நடவடிக்கையை மூலம்  காவேரி மருத்துவமனை சுய-சார்புநிலையை பெற்ற முதல் பன்நோக்கு மருத்துவமனையாக திகழ்வதால் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.

Author: ADmiNIstRAtoR

10 thoughts on “காவேரி மருத்துவமனை ஆக்சிஜன் தேவைகளை எதிர்கொள்ள சுய-சார்புநிலையை பெற்று சாதனை

  1. Pingback: Full Guide
  2. Pingback: 호두코믹스
  3. Pingback: 토렌트 다운
  4. Pingback: sili box vape
  5. Pingback: remisolleke

Comments are closed.