முதல் ஆபரேஷனே சக்ஸஸ், வேட்டையாடிய சைலேந்திரபாபு

சென்னை: முதல் வேலையையே சக்ஸஸ் செய்து முடித்துள்ளார் டிஜிபி சைலேந்திரபாபு. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலினின் பாராட்டை பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் குழந்தைகள் கடத்தல் என்பது தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த குழந்தைகள் கடத்தல் என்பது மிகப்பெரிய நெட்வொர்க்.. குழந்தைகளை கடத்தும் அம்புகள் கைதாவார்களே தவிர, எய்தப்படுபவர்கள் கைதாவதே இல்லை.. அத்துடன் சட்டத்தின் பிடியில் இவர்கள் தப்பிக்கும் படலமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இப்படித்தான் கடந்த ஆட்சியில் அமுதா என்ற நர்ஸ் சிக்கினார்.. நாமக்கல்லை சேர்ந்தவர். குழந்தைகளை மனசாட்சியே இல்லாமல் விற்றுள்ளார். அதுவும் நாமக்கல்லை சுற்றி உள்ள மலைவாழ் மக்களின் குழந்தைகளை குறி வைத்துள்ளார். பணத்தை காண்பித்து அவர்களை ஏமாற்றி, பச்சை குழந்தைகளை விற்று லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளார். இறுதியில் சிபிசிஐடி போலீசார் விசாரணை தேவைப்படும் அளவுக்கு விவகாரம் முற்றியது.

இப்போதும் ஒரு கும்பல் அப்படியே தமிழ்நாட்டுக்குள் வட்டமடித்து கொண்டிருக்கிறது. கடந்த வாரம் மட்டும் 2 முக்கிய குழந்தைகள் கடத்தல்கள் நம் மாநிலத்தில் நடந்துள்ளது. அந்த 2 கடத்தலுமே மதுரையில் நடந்துள்ளது. அதாவது, ஜெய்ஹிந்த் புரம் பகுதியை சேர்ந்த சித்ரா என்பவர். இவருக்கு வீடு எதுவும் இல்லை. நடைபாதையில்தான் வசித்து வருகிறார். 6 குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால், 2 குழந்தைகளை காணவில்லை.

அதேபோல, மதுரையில் ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வரும் சிவக்குமார் அவரது, கள்ளகாதலி கலைவாணி என்பவர்கள் குழந்தைகளை விற்று சம்பாதித்துள்ளனர். சமீபத்தில் 2 குழந்தைகளை கொரோனாவால் இறந்ததாக கூறி ஏமாற்றியும் உள்ளனர். இந்த 2 சம்பவங்களுமே மதுரைவாசிகளுக்கு தூக்கி வாரிப்போட்டது. இதையடுத்துதான், டிஜிபியின் கவனத்துக்கு வந்தது. முதல் வேலையாக, குழந்தைகள் கடத்தல் கும்பலை பிடிக்க களமிறங்கினார். தனி டீமும் அமைக்கப்பட்டது.

இறுதியில், சித்ராவின் குழந்தைகள் 2 பேரையும் மீட்டனர். அதேபோல, ஆதரவற்றோர் இல்லத்தில் விற்கப்பட்ட மேலும் 2 குழந்தைகளை மீட்டனர். சம்பந்தப்பட்டவர்களையும் கைது செய்துள்ளனர். இவர்கள் எல்லாமே ஒரே புள்ளியில் இணையும் கிரிமினல்கள். குழந்தைகளை கடத்துவதற்கென்றே தனி வீடு, தனி கார் போன்ற வசதிகளுடன் இருப்பவர்கள். மொத்த பேரையும் கூண்டோடு தூக்கி உள்ளது தமிழ்நாடு போலீஸ்.

இது சைலேந்திரபாபுவுக்கு கிடைத்த முதல் வெற்றியாகும். இனி ஒருத்தரும் குழந்தைகளை தொடுவதற்கே அச்சம் வரும் அளவுக்கு கடிவாளம் போட்டு வைத்துள்ளார். இந்த விஷயம் முதல்வரின் காதுக்கும் எட்டி உள்ளது. குழந்தைகள் கடத்தல் விஷயத்தில் டிஜிபியை மனம் திறந்து பாராட்டினாராம். ஏற்கனவே, பதவியேற்றதுமே புல் பவர் கொடுத்திருந்தார். சமூக விரோதிகள் யாராக இருந்தாலும் தயவுதாட்சண்யமே பார்க்க கூடாது என்று அறிவுறுத்தியும் இருந்த நிலையில், முதல் வேலையை கனகச்சிதமாக முடித்துள்ளார் டிஜிபி.

Author: ADmiNIstRAtoR

13 thoughts on “முதல் ஆபரேஷனே சக்ஸஸ், வேட்டையாடிய சைலேந்திரபாபு

  1. Pingback: แทงหวย
  2. Pingback: yehyeh
  3. Pingback: click for source
  4. Pingback: dating app
  5. Pingback: blote tieten
  6. Pingback: fox888
  7. Pingback: steenslagfolie
  8. Pingback: good tide gummies
  9. Pingback: Terrorism
  10. Pingback: live models

Comments are closed.