மீண்டும் தலைவரானார் ஆர்.கே.செல்வமணி

பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளத்தின் தேர்தல் பிப்ரவரி 15 ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மனுத்தாக்கல் இன்றுடன் முடிந்தது.

இதில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் டைரக்டர் ஆர்.கே.செல்வமணியை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. இதனால் ஒருமித்த ஆதரவுடன் மீண்டும் பெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொரோனா லாக்டவுன் சமயத்தில், சங்க உறுப்பினர்களின் நலனுக்காக செல்வமணி பெரிதும் பாடுபட்டார். பெப்சி தலைவர் என்ற முறையில் பிரபலங்கள் பலரிடமும் நிதி திரட்டி, அதனை உறுப்பினர்கள் அனைவருக்கும் சமமாக பிரித்துக் கொண்டுத்துள்ளார். பெப்சி உறுப்பினர்களுக்காக குரல் கொடுக்க அவர் எப்போதும் தவறியது இல்லை. பெப்சியின் கீழ் 23 சங்கங்கள், 25,000 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களிடம் செல்வமணி மீது நல்ல மதிப்பும் மரியாதையும் உள்ளது. இதனால் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே அவர் ஒருமனதாக மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை என சங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். தலைவர் தவிர மற்ற பதவிகளுக்கான தேர்தல் பிப்ரவரி 15 ம் தேதி திட்டமிட்டபடி நடத்தப்பட உள்ளது. அதில் பதிவாகும் ஓட்டுக்கள் அன்றே எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

Author: ADmiNIstRAtoR

7 thoughts on “மீண்டும் தலைவரானார் ஆர்.கே.செல்வமணி

  1. Pingback: lsm99
  2. Pingback: altogel

Comments are closed.