சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வந்த அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் கொரோனா வைரஸ் பிரச்சனையால் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி மீண்டும் படப்பிடிப்பை துவங்கினார்கள். அப்பொழுது படக்கழுவை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்தனர்.
ஹைதராபாத்திலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட ரஜினியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியதாகிவிட்டது. இந்நிலையில் அண்ணாத்த படம் தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக நவம்பர் மாதம் 4ம் தேதி ரிலீஸாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. அறிவிப்பு வெளியான பிறகு மீண்டும் படப்பிடிப்பை துவங்குவது குறித்து சிவா ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் மீண்டும் துவங்கவிருக்கிறதாம்.
முன்னதாக சில காட்சிகளை வட இந்தியாவில் ஷூட் செய்ய நினைத்தார் சிவா. தற்போது வட இந்தியா ஷெட்யூலை கைவிட்டு அந்த காட்சிகளை ஹைதராபாத்திலேயே படமாக்கப் போகிறாராம். ரஜினி தற்போது நன்றாக குணமாகிவிட்டாராம். இருப்பினும் அவர் ஹைதராபாத் கிளம்புகிறார் என்றாலே ரசிகர்கள் கவலை அடைகிறார்கள். படப்பிடிப்புக்காக ஹைதராபாத்துக்கு செல்பவர்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது என்பது தான் அவர்களின் கவலைக்கு காரணம்.
ஐபிஎல் போட்டிகள் போன்று bio bubble முறையை பயன்படுத்தியும் அண்ணாத்த படக்குழுவை சேர்ந்த 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் மீண்டும் படப்பிடிப்பை துவங்கவிருக்கிறார்கள். 40 சதவீத காட்சிகளை படமாக்க வேண்டியிருக்கிறது. அதில் ரஜினி தொடர்பான காட்சிகள் தான் அதிகம்.
எனவே, ரஜினி இல்லாமல் படப்பிடிப்பை நடத்த முடியாது. ரஜினியின் வசதி கருதி சென்னையிலேயே செட் போட்டு படப்பிடிப்பை நடத்தப் போவதாக கூறப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஹைதராபாத் கிளம்புகிறது படக்குழு.





















10 thoughts on “அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள ரஜினிகாந்த் ஹைதராபாத் கிளம்பவிருக்கிறார்”
Comments are closed.