சென்னை சேத்துப்பட்டில் உள்ள சென்னை கிறித்துவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியின், 191ம் ஆண்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் Vellore Institute of Technology (VIP) துணைத் தலைவர் டாக்டர் சேகர் விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விழாவின் தொடக்கத்தில் முதலமைச்சரின் தீர்மானத்திற்கு ஏற்ப தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதன் பின்னர் பள்ளியின் பாடல் இரண்டாவதாக இடம்பெற்றன.
பின்னர் பள்ளியின் தலைமை ஆசிரியரும் தாளாளருமான டாக்டர் ஜி. சிவதாஸ் தினகரன் வரவேற்புரை ஆற்றினார்.
இதனை தொடர்ந்து பள்ளி இசை குழுவினரின் சிறப்பு பாடல் நிகழ்ச்சி விழாவில் பாடப்பட்டது.
பின்னர் மேடையில் பேசிய சேகர் விஸ்வநாதன், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பாராட்டியதுடன் , சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் .
இதனை அடுத்து பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வுகளில் 100% தேர்ச்சி பெற செய்த ஆசிரியர்களை பாராட்டி கௌரவித்தார்.
மேலும் விடுப்பு எதுவும் எடுக்காமல் சிறப்பான வருகை பதிவை பேணிய ஆசிரியர்களுக்கு, அவர்களின் கடமை உணர்வை பாராட்டி கௌரவித்தார்.
இவ்விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளின் மூலம் மாணவர்களின் திறமையும் படைப்பாற்றலும் சிறப்பாக வெளிப்பட்டன.


















