சுயம் சாரிட்டபிள் டிரஸ்ட் (பதிவு.) மற்றும் டி.பி. வேர்ல்ட் இணைந்து சிறகு சிறுவர்கள் விடுதி (முதல் மற்றும் இரண்டாம் மாடி தங்குமிடம்) திறப்பு விழாவை கொண்டாடினர்

சென்னை, நவம்பர் 8, 2025:
சுயம் சாரிட்டபிள் டிரஸ்ட் (பதிவு.), டி.பி. வேர்ல்ட் நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூக பொறுப்பு (CSR) நிதியுதவியுடன் கட்டப்பட்ட புதிய சிறகு சிறுவர்கள் விடுதியை (முதல் மற்றும் இரண்டாம் மாடி தங்குமிடம்) இன்று சிறப்பாக திறந்து வைத்தது.இந்த விழா நவம்பர் 8, சனிக்கிழமை, அஞ்சநேய நகர், சிவலிங்கபுரம், பாக்கம் கிராமத்தில் உள்ள சிறகு சிறுவர்கள் விடுதி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவில் திரு. எஸ். சுதர்சனம், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் (மாதவரம் தொகுதி), மற்றும் திரு. கே. எஸ். கந்தசாமி, ஐ.ஏ.எஸ்., நிர்வாக இயக்குநர் – தாட்கோ (TAHDCO) ஆகியோர் தலைமை விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.திரு சி. எம். முரளீதரன், மண்டல இயக்குநர், இந்தியா, டி.பி. வேர்ல்ட், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

புதியதாக திறக்கப்பட்ட சிறுவர்கள் விடுதி முழுமையாக சூரிய ஆற்றலால் இயங்கும் பசுமை கட்டிடம் ஆகும்; மேலும், “Zero Waste Policy” அடிப்படையில் செயல்படுகிறது. விழாவில் சிறகு மாண்டிசோரி பள்ளி மாணவர்கள் நடத்திய இசை, நடனம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன. இவை அவர்களின் படைப்பாற்றல், தன்னம்பிக்கை மற்றும் உறுதியை பிரதிபலித்தன.

சி. எம். முரளீதரன், மண்டல இயக்குநர், இந்தியா, டி.பி. வேர்ல்ட் (மெரைன் சர்வீசஸ் பிரிவு) கூறினார்:
“சுயம் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் சிறகு மாண்டிசோரி பள்ளியுடன் இணைந்து, பொருளாதார ரீதியாக பின்தங்கிய குழந்தைகளுக்கான தரமான கல்வியை மேம்படுத்துவதில் பங்கேற்பதில் டி.பி. வேர்ல்ட் பெருமை கொள்கிறது. சிறுவர்களின் விடுதி விரிவாக்கத்திற்கும் ஊழியர் ஆதரவிற்கும் எங்களது பங்களிப்பு, பாதுகாப்பான மற்றும் ஆதரவான கல்வி சூழலை உருவாக்கும் எங்கள் உறுதியை வலியுறுத்துகிறது. கல்வி அனைத்தையும் மாற்றுகிறது, அந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை கொள்கிறோம்.”

கிஸ்னா யாதவ், தலைமை சட்ட அதிகாரி, டி.பி. வேர்ல்ட் (மெரைன் சர்வீசஸ் பிரிவு) தெரிவித்தார்:
“சிறகு மாண்டிசோரி பள்ளியும் சுயம் சாரிட்டபிள் டிரஸ்டும் வழங்கும் இலவசக் கல்வி மற்றும் முழுமையான பராமரிப்பு பணி ஒரு அருமையான முயற்சி. சிறுவர்கள் விடுதி விரிவாக்கத்திற்கும் ஊழியர் ஆதரவிற்கும் நிதி வழங்குவதன் மூலம், ஒவ்வொரு குழந்தையும் கற்கவும், வளரவும், தன்னுடைய முழு திறனை வெளிப்படுத்தவும் கூடிய பாதுகாப்பான சூழலை உருவாக்க உதவி செய்கிறோம். இது குழந்தைகளின் எதிர்காலத்திலும், அவர்கள் வளர்க்கும் சமூகத்திலும் முதலீடு செய்வதாகும்.”

சுயம் சாரிட்டபிள் டிரஸ்ட் (பதிவு.) நன்றி தெரிவித்தது:
“எங்களுக்கு இந்த மாபெரும் உதவியை செய்திருக்கும் டி.பி. வேர்ல்டுக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறோம். அவர்களின் தக்க சமய உதவி மூலம் இக்குழந்தைகளின் வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வர எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது.”

சுயம் சாரிட்டபிள் டிரஸ்ட் (பதிவு.) ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம் ஆகும். இது சிறகு மாண்டிசோரி பள்ளி வழியாக ICSE பாடத்திட்டத்தில் இலவசக் கல்வி வழங்கும் இந்தியாவின் முதல் நிறுவனம் என்ற பெருமை பெற்றுள்ளது.அவர்களின் இடையறாத முயற்சிகளால் பல குழந்தைகளின் வாழ்க்கை உயர்த்தப்பட்டு, அவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கும் பங்களித்து வருகின்றனர்.

Author: ADmiNIstRAtoR