பெரும்பாக்கம் நேசமணி நகரில் கிராம பஞ்சாயத்து சார்பில் கழிவுநீர்கால்வாய் அமைக்கும்போது திங்க் கியாஸ் வினியோக குழாயில் சேதம்

காஞ்சிபுரம், செப் 17- காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியில் பூமிக்கு அடியில் குழாய் பதித்து அப்பகுதி மக்களுக்கு திங்க் கியாஸ் (THINK Gas என்பது முன்பு AG&P Pratham என அறியப்பட்டது) நிறுவனம் இயற்கை எரிவாயு கியாஸ் வினியோகம் செய்து வருகிறது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணிக்காக ஜேசிபி எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி ஏற்பட்டது. அங்கு திங்க் கியாஸ் ஊழியர் நிறுவனத்திற்கு சொந்தமான குழாய்கள் பூமிக்கு அடியில் பதிக்கப்பட்டு இருப்பதை தெரிவித்துள்ளார்.

அதையும் மீறி பள்ளம் தோண்டி கவனக் குறைவாக செயல்பட்டதால் குழாயில் சேதம் ஏற்பட்டது. இதன் காரணமாக குழாயில் இருந்து கியாஸ் வெளியேறியதால் உடனடியாக கியாஸ் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. திங்க் கியாஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் சேதத்தை உடனடியாக சரி செய்து கியாஸ் வினியோகம் செய்யப்பட்டது.

மத்திய, மாநில அரசுகளின் ஆணைப்படி இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வீடு மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டிற்காக குழாய் மூலம் இயற்கை எரிவாயு (கியாஸ்) வினியோகத்தை திங்க் கியாஸ் நிறுவனம் செய்து வருகிறது.

நடப்பு சட்டத்தின்படி ஐபிசி பிரிவு 285 மற்றும் 336-ன் கீழ், அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்படும் இதுபோன்ற பணிகளால் ஏற்படும் சேதங்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 25 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். அரசு சட்டத்தின்படி, மூன்றாம் தரப்பினர் பள்ளம் தோண்டும் பணிகளைத் தொடங்க திட்டமிட்டால், அவர்கள் நகராட்சி அல்லது நகர எரிவாயு வினியோக நிறுவனத்திற்கு ‘தோண்டுவதற்கு முன் தொடர்பு கொள்ளுங்கள்’ என்னும் எண்ணிலும் திங்க் கியாஸ் (நிறுவனத்தின் கட்டணமில்லா எண். 1800-2022-999 மூலம் தெரிவிக்க வேண்டும். சட்டத்தை பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், இதுபோன்ற அலட்சியங்களைத் தவிர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், மூன்றாம் தரப்பினரால் எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை இந்த சம்பவம் மீண்டும் வலியுறுத்துகிறது என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Author: ADmiNIstRAtoR