சென்னை தரமணியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் கடந்த நான்கு வருடமாக 7.5 ரிசர்வேஷன் மூலமாக சேர்க்கப்படும் மாணவர்களுக்கு கல்லூரி விடுதி இல்லாத காரணத்தால் மாணவர்கள் கடந்த நான்கு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்,
அவர்களுடைய போராட்டம் வெற்றியடைய ஆதரவு தெறித்து முற்போக்கு மாணவர் கழகத்தின் சார்பாக மாநில பொறுப்பாளர் மோனிஷ்வரன் நேரில் சென்று உங்களுடன் முற்போக்கு மாணவர் கழகம் எப்பொழுதும் துணை நிற்கும் என்று கூறி அவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டார்,
மேலும் எழுச்சி தமிழர் மூலமாக தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு உங்கள் கோரிக்கைகளை கொண்டு சென்று உடனடியாக தீர்வு தரப்படும் என்று மாணவர்களிடம் உறுதி அளித்தார்,
இதில் முற்போக்கு மாணவ கழகத்தின் சார்ந்த கரிகால்வளவன்,
ஜோஸ்வா, ஜெயபிரியன் மற்றும் முற்போக்கு மாணவருக்காக மாவட்ட துணை அமைப்பாளர்கள் மடிப்பாக்கம் லோகேஷ் வேளச்சேரி அனீஸ் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.





















