சரஸ்வதி பூஜையை முன்னிட்டு த.கோ. தாயுமானவன் தலைமையில் தூரிகா ஓவியப் பள்ளியில் ஓவிய பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தர சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி

தூரிகா ஓவியப் பள்ளி சார்பில் சரஸ்வதி பூஜை விழா மற்றும் ஓவிய பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு!

மறைமலைநகர்: தூரிகா ஓவியப்பள்ளி சார்பில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஓவிய பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தர சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாக அரங்கத்தில் இதன் நிறுவனர்
த.கோ. தாயுமானவன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைப்பெற்றது. இப்பள்ளியின் முதல்வர் மற்றும் செயலாளர் தா. செண்பக வள்ளி அவர்கள் முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில் உலகத் திருக்குறள் கூட்டமைப்பின் செங்கல்பட்டு மாவட்டத்தலைவர் இரா. சிவஞானப் பாண்டியன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில் தூரிகா ஓவியப் பள்ளி மற்றும் அதன் கிளை பள்ளி மாணவர்களுக்கு ஓவியத் தேர்வு நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு தரச்சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இறுதியில் பாக்யலட்சுமி சங்கர் அவர்கள் நன்றியுரை நல்கினார். இந்த விழாவில் ஓவிய பள்ளி ஆசிரியர் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துக்கொண்ட னர்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் 2010 முதல் இயங்கிவரும் தூரிகா ஓவியப் பள்ளி நேரடி மற்றும் தொலை தூரக்கல்வி மூலம் உலகில் பல பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு ஓவியக் கல்வி வழங்கி சிறந்த முன்னுதாரணமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Author: ADmiNIstRAtoR