நாடு முழுவதும் வருடந்தோறும் உலகம் முழுதும் மார்ச் 27 அன்று உலக நாடக தினம் கொண்டாடப்பட்டுவருகிறது. இத்தினத்தை முன்னிட்டு சென்னை மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஆராய்ச்சித்துறை மற்றும் காட்சித் தொடர்புத்துறை இணைந்து நாடக நிகழ்ச்சி நடத்தியது.
இதில் பிரியாபழனி முருகன் ஆராய்ச்சித்துறையின் மாணவி ஒருங்கிணைப்பாளராகவும், மாநில செயலாளர், அகில இந்திய பத்திரிக்கையாளர் சங்கத்தில் பணியாற்றி வரும் மோனிஷ்வரன் மற்றும் ஜீதமிழ் தொலைக்காட்சியில் இந்ரா நாடகத்தில் நடித்து வரும் தயவர்ஷினி ஆகிய இருவரையும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர்.
மேலும் நிகழ்ச்சியில் நாடகத் திறமைகளைக் காட்ட சிறந்த நடிப்புத் திறன் மற்றும் நடிப்பு குழுக்களுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் 300 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.
அதில் மிகவும் சிறந்த நடிப்புத் திறனுக்காக நித்யஶ்ரீ ஆராய்ச்சித்துறை, பிரித்திகா உளவியல்த்துறை ஆகிய இரண்டு மாணவிகளுக்கு பரிசு அளிக்கப்பட்டது.




















