இஸ்ரே அமைப்பின் சென்னை மண்டல 35 ஆம் ஆண்டு பதவியேற்பு விழா

இண்டியன் சொசைட்டி ஆஃப் ரீடிங்க் ரெஃப்ரிஜிரேட்டர், ஏர் கண்டிஷனர் (இஸ்ரே) என்னும் ஏர் கண்டிஷனர், ரெஃப்ரிஜிரேட்டர் நிறுவனங்களில் பணிபுரியும் இன்ஜினியர்கள் நலனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.

இந்த அமைப்பின் 2024 – 25 ஆண்டிற்கான அமைப்பின் நிர்வாகிகளுக்கான தேர்தலில் தேர்வானவர்கள் 35 ஆம் ஆண்டு பதவியேற்பு நிகழ்ச்சி சென்னை தனியார் விடுதியில் நடைப்பெற்றது.

இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் தலைவராக அசோக்குமார் சுப்பிரமணியன் செயலாளராக நாகராஜன், துணைத்தலைவராக தியாகராஜன், பொருளாளராக இளமுருகன் ஆகியோருடன் 64 செயற்குழு உறுப்பினர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதில் முன்னாள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

புதிதாக தலைவர் பொறுப்பேற்றுக் கொண்ட பின் அசோக் குமார் சுப்ரமணியன் செய்தியாளர்களிடம்
தெரிவித்ததாவது: –

உலகின் தலைசிறந்த 5 நிறுவனங்களிலிருந்து டிப்ளமோ ,பட்ட படிப்பு, மற்றும் அனுபவம் சார்ந்த இன்ஜினியர்கள் நலனை கருத்தில் கொண்டு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் தலைநகரான டெல்லியில் முதன்முதலாக இஸ்ரே அமைப்பு நிறுவபட்டது.

சென்னை மண்டலத்தில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு இது தொடங்கப்பட்டது. இதில் ஆண்டு தோறும் நிர்வாகிகள் மற்றும 64 செயற்குழு உறுபபினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதன் தொடர்ச்சியாக 2024 – 25 ஆண்டிற்கான நிர்வாகிகள் பதவி ஏற்று கொண்டனர்.

இந்த அமைப்பு இந்தியாவை கடந்து பஹ்ரைன், கத்தார், நேபாளம், நைஜீரியா ஆகிய நாடுகளில் பல கிளைகள் உள்ளன. சென்னை மண்டல அமைப்புகளில் மட்டும் 26,000 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த அமைப்பு ஏர் கண்டிஷனர், ரெஃப்ரிஜிரேட்டர் இன்ஜினியர்களுக்கு தொழில் சார்ந்த அறிவை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளவும் தொழில் நுணுக்கங்கள் யுக்திகயை வளர்த்துக் கொள்ளவும் இந்த அமைப்பு செயல்படுகிறது என்றார்.

Author: ADmiNIstRAtoR