சென்னை, மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பல்கலைக்கழகத்தின் வணிகவியல் துறையும், Miles Education அமைப்பும் மற்றும் Emperor Research Foundation அமைப்பும் இணைந்து நடத்திய சர்வதேச கருத்தரங்கில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் Dr.G.ரவிக்குமார் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்தார்.








பல்கலைக்கழகத்தின் நிறுவனவேந்தர் Dr.A.C.சண்முகம் அவர்கள், தலைவர் Er.A.C.S.அருண்குமார் அவர்கள், Vice Chancellor Dr.S.கீதாலட்சுமி அவர்கள், பதிவாளர் Dr.C.B.பழனிவேலு அவர்கள், கூடுதல் பதிவாளர் Dr.D.B.ஜெபராஜ் அவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதல் படி நிகழ்ச்சியை Dr.C.B.செந்தில்குமார் அவர்கள் தலைமை ஏற்றி நடத்தினர்.
இதில் சிறப்பு விருந்தினர்களாக குருநானக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் Dr.செல்வராஜ் அவர்கள், திரு.விஷ்ணுசந்தர் அமெரிக்கா, சர்வதேச பேச்சாளர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் மாணவர்கள் என 500க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதில் சிறந்த பேராசிரியர்கள் விருது, சிறந்த ஆராய்ச்சியாளர்கள் விருது, சிறந்த கட்டுரைக்கான விருதுகள் வழங்கப்பட்டன.






























