தமிழ்நாடு அரசின்‌ குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ துறையின்‌ FaMe TN மற்றும்‌ RXIL குளோபல்‌ லிட்‌ இணைந்து நடத்தும்‌ பன்னாட்டு வர்த்தக நிதி சேவைகள்‌ தளத்தின்‌ பயன்பாடு குறித்தான விழிப்புணர்வு மற்றும்‌ குழு கலந்தாய்வு நிகழ்ச்சி

தமிழ்நாடு அரசின்‌ குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ துறையின்‌ FaMe TN மற்றும்‌ RXIL குளோபல்‌ லிட்‌ இணைந்து நடத்தும்‌ பன்னாட்டு வர்த்தக நிதி சேவைகள்‌ தளத்தின்‌ பயன்பாடு குறித்தான விழிப்புணர்வு மற்றும்‌ குழு கலந்தாய்வு நிகழ்ச்சி 11.03.2023 அன்று. சென்னை, கிண்டி, சிட்கோ தலைமை இடத்தில்‌ நடைபெற்றது.


இதனைத்தொடர்ந்து, தலைமையுரை ஆற்றிய மாண்புமிகு குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ துறை அமைச்சர்‌ அவர்கள்‌, “நாட்டில்‌ ஏறக்குறைய 6 கோடியே 30 லட்சம்‌ MSME நிறுவனங்கள்‌ இயங்குகின்றன. இதன்‌ மூலம்‌, 11 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கின்றது நாட்டின்‌ மொத்த உள்நாட்டு உற்பத்தியில்‌ MSME நிறுவனங்கள்‌ 3 இல்‌ 1 பகுதியும்‌ மொத்த ஏற்றுமதியில்‌ 45% பங்கையும்‌ வகிக்கின்றது. இதில்‌, தமிழகத்தின்‌ பங்களிப்பு 9.25% ஆக உள்ளது. ஏற்றுமதியை பொறுத்தமட்டில்‌ – தமிழ்நாடு ரூ. 1 லட்சத்து 93 ஆயிரம்‌ கோடி ஏற்றுமதி செய்து இந்தியாவிலேயே 3-வது பெரிய ஏற்றுமதி மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.

மாண்புமிகு முதல்வர்‌ அவர்கள்‌ தமிழ்நாட்டை ஏற்றுமதியில்‌ முதன்மை மாநிலமாக கொண்டு வர தமிழ்நாடு ஏற்றுமதி திட்டம்‌-2021 வெளியிட்டார்கள்‌. அதனை நிறைவேற்றும்‌ விதமாக ஏற்றுமதியை ஊக்குவிக்கும்‌ வகையில்‌, MSME துறையின்‌ மூலம்‌ ஏற்றுமதி மண்டலங்கள்‌ மாவட்ட ஏற்றுமதி மேம்பாட்டு மையங்கள்‌ அமைக்கப்படும்‌ என கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில்‌ அறிவிக்கப்பட்டது.

இதனை செயல்படுத்தும்‌ விதமாக தமிழ்நாட்டில்‌ ரூ. 100 கோடி மதிப்பீட்டில்‌ 0
இடங்களில்‌ உள்ள ஏற்றுமதி மையங்களை மேம்படுத்த அரசாணை
வெளியிடப்பட்டுள்ளது. மேலும்‌, MSME நிறுவனங்களுக்கு ஏற்றுமதி குறித்த
ஆலோசனைகளையும்‌ உதவிகளையும்‌ வழங்க கோயம்புத்தார்‌ திருச்சி ஒசூர்‌ மதுரை ஆகிய 4 இடங்களில்‌ வர்த்தகம்‌ மற்றும்‌ ஏற்றுமதி தகவல்‌ மையங்கள்‌ அமைக்க, ரூ. 16 கோடியே 69 லட்சம்‌ நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Msme: நிறுவனங்கங்கள்‌ ஏற்றுமதி குறித்து அறிந்து மாண்புமிகு முதல்வர்‌
அவர்களால்‌ “குறு, சிறு மற்றும்‌ நடுத்தர தொழில்‌ நிறுவனங்களுக்கான ஏற்றுமதி
கையேடு” வெளியி!ப்பட்டது. மேலும்‌, ஏற்றுமதி குறித்து மாவட்டத்‌ தொழில்‌ மைய உதவி பொறியாளர்கள்‌ மற்றும்‌ அலுவலர்களுக்கு முதல்‌ கட்டமாக – கடந்த டிசம்பர்‌ மாதம்‌ இறக்குமதி மற்றும்‌ ஏற்றுமதியாளர்களின்‌ கூட்டமைப்பு மூலம்‌ பயிற்சிகளும்‌, இரண்டாம்‌ கட்டமாக – கடந்த பிப்ரவரி மாதம்‌ இந்திய ரிசர்வ்‌ வங்கி வெளிநாட்டு வர்த்தக பொது
இயக்குநரகத்தின்‌ மூலமும்‌ பயிற்சிகள்‌ அளிக்கப்பட்டது. இன்று காலை முதல்‌ இந்த பயிற்சிகளையும்‌ இணைத்து ஒரு குறுகிய கால பயிற்சியும்‌ மாவட்‌. தொழில்‌
வலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்களுக்கு வழங்கப்பட்டள்ளது.

ஏற்றுமதி சார்ந்த MSME: தொழில்‌ நிறுவனங்களை ஊக்குவிக்கவும்‌. ஆலோசனை மற்றும்‌ உதவிகள்‌ வழங்கவும்‌, மாண்புமிகு முதல்வர்‌ அவர்களால்‌ துவங்கி வைக்கப்பட்ட FaMe TN க்கான அலுவலகம்‌ இன்று இங்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. மேலும்‌. அனைத்து மாவட்ட தொழில்‌ மையங்களிலும்‌ எற்றுமதி மேம்பாட்டு மையங்கள்‌ அமைக்கப்படவுள்ளது. இந்த மாவட்ட ஏற்றுமதி மையங்களில்‌ இப்பயிற்சி பெற்ற அலுவலர்கள்‌ மூலம்‌ ஏற்றுமதியாளர்களுக்கு தேவைப்படும்‌ அனைத்து அலோசனைகளும்‌ வழங்கப்படும்‌. இந்த மையங்களில்‌ ஏற்றுமதி செய்யப்படும்‌ பொருட்கள்‌ மற்றும்‌ ஏற்றுமதி செய்யப்படும்‌ நாடுகள்‌ குறித்த தகவல்கள்‌ பராமரிக்கப்படும்‌. MSME தொழில்‌ நிறுவனங்களை ஏற்றுமதியாளர்களாக மாற்றவும்‌, ஏற்றுமதியாளர்களுக்கு தேவைப்படும்‌ உட்கட்டமைப்பு வசதிகளை கண்டறிந்து மேம்படுத்த நடவடிக்கையும்‌ மேற்கொள்ளப்படும்‌. மேலும்‌, ஒவ்வொரு மாவட்டத்தின்‌ தனித்துவம்‌ வாய்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்ய மாவட்ட அளவிலான ஏற்றுமதி மேம்பாட்டு திட்டம்‌ தயாரிக்கப்படும்‌ எனத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

MsMe நிறுவனங்கள்‌, பெருந்தொழில்‌ நிறுவனங்களுக்கு வழங்கிய பொருட்கள்‌ மற்றும்‌ சேவைகளுக்கு உரிய தொகையை பெறுவதில்‌ ஏற்படும்‌ காலதாமத்திற்கு தீர்வு காண 4 மண்டலங்களில்‌ வசதியாக்க மன்றங்கள்‌ அமைக்கப்பட்டுள்ளது. கழக அரசு பொறுப்பேற்ற பிறகு இம்மன்றங்கள்‌ மூலம்‌ 430 நிறுவனங்களுக்கு ரூ. 84 கோடி 62 லட்சம்‌ பெற்று வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌.

MSME நிறுவனங்களின்‌ நடை முறை மூலதன சிக்கலை தீர்ப்பதற்காக, தமிழ்நாடு வர்த்தக வரவுகள்‌ மற்றும்‌ தள்ளுபடி தளம்‌ – Tamilnau TReDS எனும்‌ புதுமை திட்டம்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்‌ அவர்களால்‌ துவக்கி வைக்கப்‌பட்டது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ இதுவரை ரூ. 155 கோடிக்கும்‌ அதிகமான விலைப்‌ பட்டியல்களுக்கு விற்பனை தொகை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில்‌ மேலும்‌ ஒரு சிறப்பு அம்‌சமாக இத்தளத்தில்‌ இணைந்துள்ள 14 வங்கிகள்‌ தங்களுடைய கடன்‌ இலக்கை ரூ. 2 ஆயிரத்து 120 கோடி அளவிற்கு நிர்ணயித்துள்ளன.

இதே போன்று, தமிழ்‌ நாடு MSME நிறுவனங்கள்‌ வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த பொருட்களுக்கான தொகையினை குறித்த காலத்தில்‌ பெறுவதற்கு ஏதுவாக பன்னாட்டு நிதி சேவைகள்‌ மைய அதிகார ஆணையத்தால்‌ அறிமுகப்படுத்தப்பட்டுள்ள
பன்னாட்டு வர்த்தக நிதி சேவைகள்‌ தளம்‌ குறித்த விழிப்புணர்வும்‌. ஆலோசனைகளும்‌ இந்த கலந்தாய்வுக்‌ கூட்டத்தில்‌ வழங்கப்படவுள்ளது. இந்த முயற்சியை முன்னெடுக்கும்‌ முதல்‌ மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தினை MSME ஏற்றுமதியாளர்கள்‌ நல்ல முறையில்‌ பயன்படுத்தி பன்னாட்டு வர்த்தக நிதி சேவை தளம்‌ குறித்த விழிப்புணர்வையும்‌ அதனை பயன்படுத்திக்‌ கொள்ளும்‌ நடைமுறைகளையும்‌ அறிந்து பயன்‌ பெறுமாறு கேட்டுக்கொண்டார்‌.

இந்நிகழ்ச்சியில்‌, மாண்புமிகு குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ துறை அமைச்சர்‌ அவர்கள்‌ மாவட்ட ஏற்றுமதி மேம்பாட்டு மையங்களை திறம்பட நிர்வகிக்கும் பொருட்டு, இறக்குமதி மற்றும்‌ ஏற்றுமதியாளர்களின்‌ கூட்டமைப்பு (FIEO) வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகம்‌ (DGFT)) மற்றும்‌ இந்திய ரிசர்வ்‌ வங்கியுடன்‌ (RBI) இணைந்து வழங்கப்பட்ட பயிற்சியில்‌ பங்கேற்ற மாவட்ட தொழில்‌ மைய அலுவலர்கள்‌ மற்றும்‌ பணியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்கள்‌.

இந்நிகழ்ச்சியில்‌ புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்ட தொழில்‌ மையத்தின்‌ களப்பணி அலுவலர்கள்‌ பயன்படுத்தும்‌ விதமாக, 10 புதிய இரு சக்கர வாகனங்களை வழங்கினார்கள்‌. மேலும்‌, FAME-TN ன்‌ விரிவாகக்கப்பட புதிய அலுவலகம்‌ இன்று துவக்கிவைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில்‌, குறு சிறு மற்றும்‌ நடுத்தர தொழில்‌ நிறுவனங்கள்‌ துறையின்‌ அரசு செயலர்‌ திரு. வி. அருண்ராய்‌ இ.ஆ.ப, தொழில்‌ ஆணையர்‌ மற்றும்‌ தொழில்‌ வணிக இயக்குநர்‌ திருமதி சிஜி தாமஸ்‌ வைத்யன்‌ இ.ஆ.ப, கூடுதல்‌ வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநர்‌ திருமதி. இராஜலக்ஷ்மி தேவராஜ்‌, தெற்கு மண்டல FIEO அமைப்பின்‌ மண்டல தலைவர்‌- திரு. ஹபீப்‌ ஹூசைன்‌, IFSCA வின்‌ முதுநிலை ஆலோசகர்‌ திரு. இராஜ்‌ கோசா, RXIL, குளோபல்‌ லிட்‌.-ன்‌ மேலாண்மை இயக்குநர்‌ மற்றும்‌ தலைமை செயல்‌ அலுவலர்‌ – திரு. கேட்டன்‌ கைக்வாட்‌ ஆகியோர்‌ பங்கேற்றனர்‌.

Author: ADmiNIstRAtoR

10 thoughts on “தமிழ்நாடு அரசின்‌ குறு, சிறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழில்‌ நிறுவனங்கள்‌ துறையின்‌ FaMe TN மற்றும்‌ RXIL குளோபல்‌ லிட்‌ இணைந்து நடத்தும்‌ பன்னாட்டு வர்த்தக நிதி சேவைகள்‌ தளத்தின்‌ பயன்பாடு குறித்தான விழிப்புணர்வு மற்றும்‌ குழு கலந்தாய்வு நிகழ்ச்சி

  1. Pingback: snuscore
  2. Pingback: Pragmatic Play
  3. Pingback: nepalese hash
  4. Pingback: drag bar
  5. Pingback: 스포츠토토

Comments are closed.