சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம் ஒருபுறம் பெட்ரோல் விலையை அதிகரித்தாலும், இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகளும் பெட்ரோல், டீசல் விலை உயர காரணமாகியுள்ளன.
கச்சா எண்ணெய்யை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது.கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 20 டாலருக்கு கீழ் சரிந்த கச்சா எண்ணெய் பேரலின் விலை, தற்போது 75 டாலர் என்ற அளவில் விற்பனையாகி வருகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையேற்றம் ஒருபுறம் பெட்ரோல் விலையை அதிகரித்தாலும், இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் விதிக்கும் வரிகளும் பெட்ரோல், டீசல் விலை உயர காரணமாகியுள்ளன.
இதனிடையே பெட்ரோல் விலை உயர்வால், நடுத்தர மற்றும் ஏழை மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தின் 27 மாவட்டங்களில் திங்கட்கிழமை முதல் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பெட்ரோல் விலையேற்றம் காரணமாக, ஏழை மற்றும் நடுத்தர மக்கள், சொந்த வாகனங்களுக்கு பதிலாக, பேருந்துகளில் பயணிக்க ஆர்வமாக உள்ளனர்.
பெட்ரோல், டீசல் விலையை குறைக்க அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையிலும், மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்கவில்லை.



















9 thoughts on “தமிழ்நாட்டில் 35 மாவட்டங்களில் சதமடித்த பெட்ரோல் விலை”
Comments are closed.