சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், பவர் ஸ்டார் ஓகே அது என்ன ஷூட்டிங் ஸ்டார்

ஸ்ரீநிதி ஆர்ட்ஸ் தயாரிப்பில் எம் ஜெ ரமணன் இயக்கத்தில் துஷ்யந்த், விவேக் பிரசன்னா நடிப்பில் உருவாகும் நகைச்சுவை ததும்பும் படம் ஷூட்டிங் ஸ்டார்.

ஸ்ரீநிதி ஆர்ட்ஸ் சார்பாக எம் ஜெ ரமணன், ஜானி டூகல், வினம்பர சாஸ்திரி ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்க எம் ஜெ ரமணன் இயக்கத்தில் காமெடி கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாக உள்ளது ஷூட்டிங் ஸ்டார்.

துஷ்யந்த், விவேக் பிரசன்னா, தெலுங்கு நடிகர் சீனிவாச ரெட்டி, இந்தி நடிகர் ரவி கிஷன் மற்றும் சில தமிழ் படங்களில் முன்னணி நாயகியாக நடித்த மாஷூம் சங்கர் முக்கிய வேடங்களில் நடிக்க, பல பிரபல இந்தி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் இப்படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார்கள்.

வாழ்க்கையில் பல ஏமாற்றங்களை சந்தித்த ஒருவனை, அவனை சுற்றியுள்ளவர்கள் எப்படி, மென்மேலும் ஏமாளி ஆக்கினார்கள் என்பதைப் பற்றி நகைச்சுவையாக சொல்வதே இப்படத்தின் கதை.

ஹாலிவுட், பாலிவுட் மற்றும் கோலிவுட் படங்களில் இணை இயக்குநராக பணிபுரிந்த எம் ஜெ ரமணன், ரசிகர்களை கவரும் வகையில் பல்வேறு அம்சங்கள் தான் எழுதி இயக்கும் இப்படத்தில் இடம்பெறும் என்று தெரிவித்தார்.

படத்தின் ஒளிப்பதிவை எஸ் ஆர் சதீஷ்குமார் கவனிக்க, பிரபல ஹிந்தி இசையமைப்பாளர்கள் அம்ஜத்-நதிம்-ஆமீர் இசையமைக்க, கலை இயக்குநராக சேத்தன் பாடக், எடிட்டராக சசிக்குமார், ஸ்டண்ட் மாஸ்டராக கனல் கண்ணன், நடன இயக்குராக விஷ்ணு தேவா இப்படத்தில் பணிபுரிகிறார்கள்.

இப்படத்தை, இந்தியில் பல திரைப்படங்களையும், விளம்பர படங்களையும் தயாரித்த ஸ்ரீநிதி ஆர்ட்ஸ் தமிழ் மற்றும் தெலுங்கில் நேரடியாக தயாரிக்கிறது. படப்பிடிப்பு ஜூன் முதல் வாரத்தில் துவங்கி சென்னை, மும்பை, ஹைதராபாத் மற்றும் கஜுராஹோ பகுதிகளில் நடைபெற இருக்கிறது.

Author: User Admin

15 thoughts on “சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், பவர் ஸ்டார் ஓகே அது என்ன ஷூட்டிங் ஸ்டார்

  1. Pingback: agenzia eventi
  2. Pingback: namo333
  3. Pingback: GRIMMS
  4. Pingback: play go88
  5. Pingback: pgg369
  6. Pingback: marbo 9000
  7. Pingback: strip chat tokens
  8. Pingback: Diyalaa
  9. Pingback: Info

Comments are closed.