கோப்ரா திரைப்படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ளார்.
கோப்ரா திரைப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இந்த கோப்ரா திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார்.
நடிகர் சீயான் விக்ரம் நடித்த ‘கோப்ரா’ திரைப்படம் நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளிவருகிறது.
இந்த கோப்ரா திரைப்படம் வருகைக்காக சியான் விக்ரம் ரசிகர்கள் மிக பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தில் சியான் விக்ரம் ஏழு விதமான கெட் அப்களில் நடித்தும் அதற்கேற்ப அவரே பல குரல்களில் பேசி இருப்பதாலும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது
இந்த நிலையில் இந்தத் திரைப்படத்தை 29 இணையதள சேவை நிறுவனங்கள் வாயிலாக, 1,785 இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட தடை விதிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில், திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
கோப்ரா திரைப்பட வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜரானார்.
அவர் கூறியதாவது…
‘மிகுந்த பொருள் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படத்தை, திருட்டுத்தனமாக இணைய தளங்களில் வெளியிட்டால் தயாரிப்பு நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படும். எனவே அதனால், தடை விதிக்க வேண்டும்’ என்றார்.
இதையடுத்து, கோப்ரா திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட கூடாது என நீதிபதி இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
13 thoughts on “‘கோப்ரா’ திரைப்படத்திற்கு வெளியிட்டு விவகாரம் குறித்து கோர்ட் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு!”
Comments are closed.