கொரோனா காற்றிலும் பரவுமாமே?

கொரோனா காற்றிலும் பரவுமாமே? எனத் திகிலுடன் கேட்பவர்களுக்கு

காற்றில் பரவுகிறது என்றால் போபால் விஷவாயு போல, ரேடியோ டீ.வி சிக்னல் போல் காற்றில் பரவி ஜன்னல் வழியே நம் வீட்டுக்குள் வருவது என்று அர்த்தம் அல்ல.
Airborne infection என்பதை அப்படியே மொழிபெயர்ப்பதால் வரும் விளைவு அது.

இரண்டு வகையில் வைரஸ் தொற்று நடைபெறுகிறது

1.Airborne – காற்றின் மூலம்
2.Droplet – தரை மேஜை போன்ற பொருட்களின் மூலம்- இவற்றைத் தொடுவதால் – ( fomites)

நாம் பேசும் போது, பாடும் போது , மூச்சு விடும் போது, இருமும் போது தும்மும் போது வெளிவரும் எச்சில், சளி துளிகளில் வைரஸ்கள் இருக்கின்றன.

இவற்றில் பெரிய துளிகள் (Droplets) கீழே தரையிலும் மேஜையிலும்( Surfaces), சுவர்கள், கதவுகளிலும் விழுகின்றன. இவற்றைத் தொட்டு நம் கைகளை நமது வாய், மூக்கு, கண்களில் வைக்கும் போது நமக்கு நோய்த் தொற்று ஏற்படுகிறது. இதற்குத்தான் அடிக்கடி கைகளைக் கழுவச் சொல்கிறோம்.

சின்னத் துளிகள் கொஞ்ச நேரம் காற்றில் மிதக்கின்றன( Aerosols). அதிக கூட்டம் உள்ள இடங்கள், காற்றோட்டம் இல்லாத இடங்கள், ஏஸி அறைகளில் காற்றில் அதிக நேரம் இவை இருக்கும். இவற்றின் மூலம் பரவுவதே Airborne infection எனப்படுகிறது

காற்றின் மூலம் பரவுதல் என்பது நெருக்கமாக இருப்பவர்கள், மிக அருகில் இருப்பவர்கள் தும்மினால் பேசினால் இருமினால் Aerosols எனப்படும் இந்த சிறிய துகள்கள் மூலம் எதிரே சுமார் ஆறு அடி வரை இருப்பவர்களுக்குத் தொற்றிக் கொள்ளும் என அர்த்தம். நெருக்கமாக இருப்பது, கூட்டங்கள், ஏஸி அறைகள், மால்கள் போன்றவை அதிக ரிஸ்க். இதற்குத்தான் எல்லோரும் மாஸ்க் அணிய வேண்டும் என்கிறார்கள். மாஸ்க் அணிந்தால் சிறிய பெரிய துகள்கள் வெளியேறுவது வெகுவாகக் குறையும்.

காற்றில் பரவுகிறது என்றால் செங்கல்பட்டில் ஒருவர் தும்மினால் அது அப்படியே செங்கல்பட்டிலிருந்து காட்டாங்குளத்தூர் வண்டலூர் என்று தாம்பரம் வரை காற்றில் அப்படியே சுற்றும் என்று அர்த்தம் இல்லை. இன்னும் சொல்லப்போனால் நல்ல காற்றோட்டமான இடங்களில் இருப்பது பாதுகாப்பானது. நோயாளிகளைக்கூட திறந்த வெளிகளில் வைக்கலாம் எனச் சிலர் கூறுகின்றனர்.

இது ஏதோ திடீரென்று சொல்லப்படவில்லை. கொரோனா ஆரம்பித்த காலத்திலிருந்தே சொல்லப்பட்டு வருகிறதுதான். பத்திரிகைகள் ஊடகங்களில் “காற்றில் பரவும் கொரோனா” என்று வரும் செய்திகளைப் பார்த்துப் பயப்பட வேண்டாம். கவனமாக இருந்தால் போதும். காற்றின் மூலம் என்றாலும் கைகளின் மூலம் பரவும் என்றாலும் சமூக இடைவெளி, மாஸ்க், கைகழுவுதல் எல்லாம் தேவைதான் – டாக்டர் ராமானுஜம்

Author: ADmiNIstRAtoR

14 thoughts on “கொரோனா காற்றிலும் பரவுமாமே?

  1. Pingback: 늑대닷컴
  2. Pingback: ufabtb
  3. Pingback: ผลบอล
  4. Pingback: niches youtube
  5. Pingback: cat888

Comments are closed.