ஆரோக்கியமான வழியில் தொப்பையை குறைக்கணுமா?

எலுமிச்சை நீருடன் தினத்தைத் தொடங்கவும்

காலையில் எழுந்ததும் ஒரு கப் காபி குடிப்பதை முதலில் நிறுத்துங்கள். நீங்கள் தொப்பையைக் குறைக்க வேண்டுமானால், காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை கலந்து குடியுங்கள். இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், நல்ல செரிமானத்தை மேம்படுத்தி, உடலில் உள்ள நச்சுக்களை வெளியெற்றி, கொழுப்புக்களை வேகமாக கரைக்கும். உங்களால் நீரில் வெறும் எலுமிச்சை சாற்றினை மட்டும் கலந்து குடிக்க முடியாவிட்டால், அத்துடன் சிறிது தேனை கலந்து கொள்ளுங்கள்.

சீரக நீர்

தினமும் காலையில் எலுமிச்சை நீரை குடிக்க முடியாவிட்டால், ஒரு நாள் எலுமிச்சை நீர் மறுநாள் சீரக நீரைக் குடிக்கலாம். சீரக நீரும் கொழுப்புக்களைக் கரைக்க உதவும் பானமாகும். இது ஒருவரது செரிமானத்தை மேம்படுத்துவதோடு மட்டுமின்றி, அடிவயிற்றில் உள்ள கொழுப்பு மற்றும் உப்புசத்தை நீக்கி, தொப்பையைக் குறைக்கும்.

காலை உணவில் புரோட்டீனை சேர்க்கவும்

உடலின் ஆற்றலுக்கு புரதம் மிகவும் இன்றியமையாதது. அன்றாட காலை உணவில் புரதம் நிறைந்த உணவுகளை சேர்ப்பதால், தசைகள் வளர்ச்சியடைவது மட்டுமின்றி, நாள் முழுவதும் முழுமையாக உணர வைப்பதோடு, உட்கொள்ளும் கலோரிகளின் அளவையும் குறைக்கும். மேலும் புரோட்டீன் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் பராமரிக்க உதவுவதோடு, உடலில் கொழுப்பைத் தேங்க வைக்கும்படியான சிக்னலை அனுப்பும் குறைந்த அளவிலான இன்சுலின் என்ற ஹார்மோனை சமப்படுத்தவும் உதவுகிறது.

முழு தானிய உணவுகள்

முழு தானிய உணவுகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது மற்றும் இயற்கையாகவே இது மிகவும் ஊட்டச்சத்துள்ள உணவும் கூட. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, வயிறு நிறைந்த உணர்வை அளிப்பதோடு, உயர் கலோரி உணவுகளின் மீதான ஆவலைக் குறைக்கிறது. ஆகவே தான் உடல் எடையைக் குறைக்க நினைப்போரை நார்ச்சத்து உள்ள உணவுகளை அதிகம் சாப்பிட பரிந்துரைக்கின்றனர்.

உணவில் மஞ்சளை சேர்க்கவும்

உடல் பருமன் அல்லது தொப்பை என்பது ஒரு அழற்சி நிலை. எனவே இஞ்சி குடும்பத்தை சேர்ந்த குர்குமின் நிறைந்த மஞ்சளை உணவில் சேர்க்கும் போது, அது உடல் பருமன் பிரச்சனையை சரிசெய்ய உதவும். மஞ்சள் உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு நல்ல பலனைத் தரக்கூடியது என்றாலும், இன்சுலின் அளவைக் கட்டுப்படுத்துவதிலும் அதிசயங்களை ஏற்படுத்தும்.

Author: ADmiNIstRAtoR

9 thoughts on “ஆரோக்கியமான வழியில் தொப்பையை குறைக்கணுமா?

  1. Pingback: vigrxplus
  2. Pingback: 검증사이트
  3. Pingback: tokens

Comments are closed.