மறைந்த டேபிள் டென்னிஸ் வீரர் திரு.விஷ்வா அவர்களின் நினைவாக முதல் மாநில மேசைப் பந்து விளையாட்டு போட்டி

ஒரு முறை தங்கப்பதக்கம் வென்று சர்வதேச சாம்பியனாகவும், இரண்டு முறை தங்க பதக்கம் வென்று இந்திய சாம்பியனாகவும், 12 முறை தங்க பதக்கம் வென்று தமிழகத்தின் சாம்பியனாகவும் தமிழக விளையாட்டு வீரர்களின் முன்னோடியாக விளங்கி மறைந்த டேபிள் டென்னிஸ் வீரர் திரு.விஷ்வா அவர்களின் நினைவாக முதல் மாநில மேசைப் பந்து (டேபிள் டென்னிஸ்) ரேங்கிங் டோர்னமெண்ட் 2020 – 2022.
சென்னை, ராயப்பேட்டை, மெஸ்டன் கல்வி கல்லூரி உள் விளையாட்டு அரங்கத்தில் “ராம் டேபிள் டென்னிஸ் கிளப்” சார்பில், முதல் மாநில டேபிள் டென்னிஸ் விளையாட்டு போட்டி ஜூன் 10, 11 & 12 ஆகிய மூன்று தினங்களாக மறைந்த திரு.விஷ்வா அவர்களின் பயிற்சியாளர் திரு. ஜெய்பிரபுராம் மற்றும் ராம்நாத் ஆகியோர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் துவக்கமாக பாதர் திரு.சூசை லூர்துசாமி அவர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு துவக்கி வைத்தார்.

இறுதிப் போட்டியை விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.AMV.பிரபாகர் ராஜா அவர்கள் துவக்கி வைத்தார்.

சிறப்பு விருந்தினராக அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய ஜனநாயக மக்கள் நலப் பேரவையின் நிறுவனர் – தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள் கலந்து கொண்டு இறுதி போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கி, வாழ்த்துக்களை தெரிவித்து சிறப்பித்தார்.

இந்நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 550க்கும் மேற்பட்ட டேபிள் டென்னிஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழக டேபிள் டென்னிஸ் அசோசியேசன் கௌரவ செயலாளர் திரு. செல்வகுமார், தலைவர் திரு.முகமது ரியாஸ் புரவலர் திரு ராம்குமார், முன்னாள் டேபிள் டென்னிஸ் தேசிய விளையாட்டு வீரர் திருமதி.அருள்செல்வி, தொழில் அதிபர் திரு.விக்னேஸ்ராஜன், FAIRA தலைமை நிலைய செயலாளர் திரு.கார்த்திக் மற்றும் திரு.ஐயப்பன், திரு.சுதாகர், திரு.மோகன் உள்ளிட்ட நண்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Author: ADmiNIstRAtoR