சென்னை 01 ஜூன் 24: சென்னை ஈக்காடுத்தாங்காலில் உள்ள தனியார் விடுதியில் ஈசிகோ இபி சார்ஜர் மற்றும் டிஜிபிஸ் ஹலோ சாப்ஸ் என்ற தனியார் நிறுவனம் முதல் முறையாக பேட்டரியால் இயக்கப்படும் வாகனங்களை எளிய முறையில் ரீசார்ஜ் செய்ய புதிய தொழில்நுட்பத்துடன் ரீசார்ஜ் செய்ய வசதியை தமிழகம் முழுவதும் கொண்டுவர திட்டமிட்டு உள்ளது. இது குறித்தான செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.
அப்போது டிஜிபிஸ் ஹெலோ சாப்ஸ் நிறுவனர் ஸ்ரீசினிவாசன் பேசியதாவது
முதல் கட்டமாக எட்டு மாவட்டங்களில் சென்னை திருச்சி திருநெல்வேலி கோயம்புத்தூர் திருப்பூர் ஈரோடு சேலம் அதனைத் தொடர்ந்து வேலூர் ஓசூர் ஆகிய இடங்களில் இந்த சார்ஜ் ஸ்டேசன் துவங்க உள்ளோம் என தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள மூன்று முக்கிய நெடுஞ்சாலைகளை முதற்கட்டமாக அமைப்பதற்கான வேலையை செய்யப்போகிறோம்.
பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் வளர்ச்சி கடந்த 20 ஆண்டுகளில் 20 இலிருந்து 30% அதிகமாக வளர்ந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் அதிக இடங்களில் பெட்ரோல் பங்குகள் உள்ளதால் தான் அதேபோல் பெட்ரோல் டீசல் வண்டிகள் அதிகமாக ஆவதற்கு பெட்ரோல் பங்க் காரணமாக இருந்தது,
அதேபோல் தான் தற்போது இந்த இ வி பங்க் மூலமாக எலக்ட்ரிக் வாகனங்கள் அதிகரிக்கும், ஒவ்வொரு ஐந்து முதல் பத்து கிலோமீட்டர் இடையே இந்த எலக்ட்ரிக் சார்ஜர் பங்குகள் வருவதற்கான வாய்ப்புகள் வருங்காலங்களில் உள்ளது என கூறினார்.
இந்த இடத்தில் முக்கியமாக மக்கள் தொகை அதிகமாக உள்ளது. என்பதை பொறுத்து எடுக்கப்படும் நில உரிமையாளர்களிடம் நிலத்தை லீசீல் எடுத்து அவர்களுக்கு லாபத்தில் பங்கு கொடுக்கப்படும், இதற்கு 500 சதுர அடி முதல் 2000 சதுர அடி வரை நிலங்கள் வைத்திருக்கும் அனைவருக்கும் எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் இலவசமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள நில உரிமையாளர்களுக்கு மாதம் நிரந்தர வருமானம் கிடைக்கும் வகையில் இதை திட்டமிட்டுள்ளோம்.
எங்கள் நிறுவனத்தில் வடிவமைக்கப்பட்ட சார்ஜரில் 60 கிலோ ஓட்ஸ் உள்ளதால் வாகனங்களை அரைமணி நேரத்திற்குள் சார்ஜ் செய்து கொள்ளலாம், வருங்காலங்களில் எங்களது நிறுவனம் எலக்ட்ரிக் வாகனங்களையும் குறைந்த விலையில் தற்போது உள்ள விலையை விட 50 சதவீதம் குறைவாக மக்களுக்கு கிடைக்கும் வகையில் வாகனங்களை தயாரிக்க உள்ளோம் என கூறினார்..