விஜய் மாதிரி வர வேண்டும் என்று ஆசைப்பட்ட தயாரிப்பாளர் மகன், இப்போ சினிமாவுக்கே வில்லன்

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகரான தளபதி விஜய் போல் தாமும் ஒரு பக்கா கமர்சியல் ஹீரோவாக வலம் வர வேண்டும் என ஆசைப்பட்டால் தயாரிப்பாளர் மகன் ஒருவன் தற்போது சினிமாவுக்கே வில்லன் போல் மாறி விட்டார் என்பதுதான் சோகமான விஷயம்.

தற்போதைக்கு தமிழ் நடிகர்களில் அதிக வியாபாரமுள்ள நடிகர் விஜய் தான். அதுமட்டுமில்லாமல் அதிக பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படங்களில் விஜய் படம் தான் முதல் இடத்தைப் பிடிக்கின்றன. அந்த வகையில் தற்போது தளபதி 65 திரைப்படம் அதிக பட்ஜெட்டில் உருவாகி வருகிறது

இந்நிலையில் ஆரம்பத்திலிருந்தே தளபதி விஜய்யை ஒரு ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு சினிமாவில் வலம் வருபவர் தான் பிரபல தயாரிப்பாளர் ஒருவரின் மகன். இவ்வளவு ஏன் விஜய்க்காக எழுதிய கதையில் அவர் நடித்த ஒரு படம் சூப்பர் ஹிட் அடித்தது.

ஆரம்பத்தில் விஜய் போலவே உருவ கேலிக்கு ஆளானார் அந்த நடிகர். அதன் பிறகு சிபிஐ அதிகாரியாக அவர் நடித்த முதல் படமே சூப்பர் ஹிட் அடித்த நிலையில் அதனைத் தொடர்ந்து வெளியான ஆக்சன் படம் ஒன்று பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது

சிட்டிக்கு மட்டும் தெரிந்த வரை பட்டி தொட்டி எங்கும் பரப்பியது அந்த படம். அதைத் தொடர்ந்து ஆக்ஷன் ஹீரோவாக வலம் வரத்தொடங்கினார். அப்போது அந்த நடிகரின் தந்தையிடம் வேறு ஒரு தயாரிப்பாளர் இந்த முகத்தை எல்லாம் வைத்து படமெடுக்க முடியுமா எனவும், உங்களுக்காக ரிஸ்க் எடுத்துள்ளேன் எனவும் ஒரு பட விவகாரத்தில் அந்த நடிகரின் முன்னாடியே அவரை கேலி செய்து விட்டாராம்

இது தாங்க முடியாமல் அந்த நடிகர் மூன்று நாளைக்கு ரூம் போட்டு அழுதாராம். தற்போது ஓரளவு எதிர்பார்ப்புள்ள நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அந்த ஆக்ஷன் நடிகர் எல்லோருக்கும் உதாரணமாக இருக்க வேண்டும் என்ற கருத்துடன் தன்னுடைய வெற்றிநடை ஆரம்பித்தார்.

ஆனால் தற்போது எல்லாருக்கும் பிரச்சனையை அவர்தான் எனும் அளவுக்கு தேவை இல்லாத சங்கங்களில் சிக்கி சிங்கியடித்துக் கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் தயாரிப்பாளர்களுக்கு கஷ்டம் கொடுக்காத இந்த நடிகர் தான் தற்போது எல்லா கஷ்டத்தையும் கொடுத்து வருகிறாராம்.

~ நன்றி சினிமாபேட்டை

Author: ADmiNIstRAtoR