தளபதி அவர்களின் சொல்லுக்கிணங்க, “#தளபதிவிஜய்நூலகம்”!

செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக,

தமிழகத்தில் இரண்டாவது இடமாக பல்லாவரம் தொகுதி மும்மூர்த்தி நகர் 5-வது தெருவில் மாணவ, மாணவிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புத்தகம் படிக்கும் திறனை மேம்படுத்தவும், பொது அறிவு சிந்தனை வளர்க்கும் விதமாக தளபதி விஜய் நூலகம் திட்டத்தினை அகில இந்திய பொதுச் செயலாளர் திரு.புஸ்ஸி.N.ஆனந்து அவர்கள் துவக்கி வைத்தார்!

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள், அணித் தலைவர்கள், பகுதி, வட்டம், கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Author: ADmiNIstRAtoR