கடந்த சில மாதங்களாக பணவீக்கம் மிக கடுமையாக உயர்ந்துள்ளது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் சில்லறை பணவீக்கம், மொத்த விலை பணவீக்கம் இரண்டுமே அதிகமாக உள்ளதால் விலைவாசி உயர்வு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வழக்கமாக அகவிலைப்படி 3% உயர்த்தப்படும். இந்நிலையில், ஜூலையில் 4% முதல் 5% வரை அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பணவீக்க விகிதம் மிக அதிகமாக இருப்பதே இதற்கு காரணம் என கூறுகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அல்லது 5% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டால் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் 4-5% அகவிலைப்படி உயர்த்தப்படும் என அரசு ஊழியர் சங்கத்தினர் கூறுகின்றனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி மட்டுமல்லாமல் அகவிலைப்படி நிலுவைத் தொகையும் இன்னும் வழங்கப்பட வேண்டும். இதுபற்றிய அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
~ நன்றி சமயம்