டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் பம்மல் பகுதியில் பிரம்மாண்டமாக திறக்கப்பட்ட இலவச இரவு பாடசாலை

பாரதரத்னா பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 130 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் நகராட்சிக்குட்பட்ட கல்யாணிபுரம் பகுதியில் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் காஞ்சி வடக்கு மாவட்ட வழக்கறிஞர் அணியின் துணைச் அமைப்பாளருமான வழக்கறிஞர் இரா.மணிமாறன் அவர்கள் தலைமையில் கலைஞர் படிப்பகம் என்ற பெயரில் ஏழை எளிய மாணவர்களுக்கான நவீன வகையில் மேம்படுத்தப்பட்ட புளு விங்ஸ் ஸ்மார்ட் கிளாஸ் என்ற இலவச இரவு பாடசாலை துவங்கப்பட்டது.

அதன்பின்பு காலை முதல் நடைப்பெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்று மற்றும் பங்கேற்ற அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படது. இதில் வழக்கறிஞர்கள் சமூக ஆர்வலர்கள் ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Author: ADmiNIstRAtoR